மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி போராட்டம்...50 விவசாயிகளை கைது செய்த போலீஸ்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Mar 23, 2025 - 14:23
Mar 24, 2025 - 14:07
 0
மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி போராட்டம்...50 விவசாயிகளை கைது  செய்த போலீஸ்

மயிலாடுதுறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு 2014ஆம் ஆண்டு பொது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3,500 தருவதாக அறிவித்திருந்த நிலையில், அதனைப் பற்றி சிந்திக்காமல், போராட்டம் நடத்திய பஞ்சாப் விவசாயிகளை துணை ராணுவத்தைக் கொண்டு கைது செய்யப்பட்ட அடக்கு முறையை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

Read more:IPL 2025: CSK vs MI போட்டி.. சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்!

 இந்நிலையில் மயிலாடுதுறையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 5 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

50 பேர் கைது

முன்னதாக, விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக ரயில் நிலையம் முன்பு டிஎஸ்பி பாலாஜி தலைமையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் தனியார் திருமண கூடத்துக்கு வேன் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர். விவசாயிகள் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Read more: TATA IPL 2025: நம்ம சென்னை, நம்ம பாதுகாப்பு.. ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’’ அறிமுகம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow