IPL 2025: CSK vs MI போட்டி.. சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்துக்கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2025 கிரிகெட் திருவிழா நேற்று ( மார். 22 ) ஆம் தேதி ஐபிஎல் 18 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அணிகள் மோதும் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளும் மிகப்பெரிய பலம் வாய்ந்த அணிகளாக உள்ள நிலையில், இந்தப் போட்டியைக் காண சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அனிருத் இசை நிகழ்ச்சி
ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடிய ஐபிஎல் தொடக்கப்போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல்களை பாடலுடன் தொடங்கிய விழாவில், பாலிவுட் நடிகை பதானி தலைமையிலான நடனக்குழுவினர் சில பாடல்களுக்கு நடனமாடினர். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதேப்போல் இன்றைய நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து அனிருத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், குட்டி சுவத்த எட்டிப்பார்த்தா, தலைவரு நிரந்தரம், அலப்பறை கிளப்புறோம் போன்ற பாடல்கள் 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சி துவங்கும். அலப்பறய பார்க்க எல்லோரும் சரியான நேரத்துக்கு வாங்க என குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் நிர்வாகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுவதாலும், வார விடுமுறை தினமான இன்று நடைபெற உள்ளதால் சிஎஸ்கே நிர்வாகம் இதனை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இந்த போட்டியின் துவக்க விழாவில் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவருக்கே உரித்தான மாஸ் பாடல்களை சிஎஸ்கே ரசிகர்கள் முன்னிலையில் பாட உள்ளார். இந்த தகவலை, சிஎஸ்கே ஐபிஎல் நிர்வாகம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
What's Your Reaction?






