துரைமுருகன்-ரஜினி விவகாரம்.. சட்டென வந்து விழுந்த கேள்வி.. மு.க.ஸ்டாலினின் பதில் இதுதான்!

விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.

Aug 27, 2024 - 22:00
Aug 27, 2024 - 22:02
 0
துரைமுருகன்-ரஜினி விவகாரம்.. சட்டென வந்து விழுந்த கேள்வி.. மு.க.ஸ்டாலினின் பதில் இதுதான்!
Stalin, Duraimurugan And Rajini

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்'  நூலின் வெளியீட்டு விழா சென்னையில் சில நாட்களுக்கு நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த், ''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் உள்ளனர். 

இவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் ஸ்டாலின் அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஸ்டாலின் சார் Hats off to You.'' என்று கூறியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஜினி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், ''அதே மாதிரிதான் மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு விழுந்து, தாடி வளர்த்து என வயதான பிறகும் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. சொல்வது எல்லோருக்கும் சுலபம்'' என்று கூறினார். துரைமுருகனின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி  ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என கூறினார். 

இதேபோல் அமைச்சர் துரைமுருகனும், "நடிகர் ரஜினி பற்றி நான் நகைச்சுவையாக பேசினேன். நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். ரஜினியும், நானும் எப்போதும் நண்பர்களாவே இருப்போம். அவருடன் எப்போதும் நட்பு தொடரும்" என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று இரவு அமெரிக்காவுக்கு புறப்பட்டார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினி-துரைமுருகன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ''துரைமுருகனும், ரஜினியும் நீண்டகாலம் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் இருவருமே இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து விட்டனர். துரைமுருகன் கூறியதை போல் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது'' என்று கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow