8 அமாவாசை சதுரகிரி சென்று வந்தால் வாழ்க்கையில் அதிசய மாற்றம் வரும்

Sathuragiri Temple : சதுரகிரியில் எழுந்தருளும் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை அமாவாசை, பவுர்ணமி தினங்களில் தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Jul 28, 2024 - 19:01
Jul 29, 2024 - 09:52
 0

Sathuragiri Temple : சித்தர்கள் உலாவும் சதுரகிரி மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும், பதினெட்டு சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எனவேதான் அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம். 

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை,

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow