ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டி.. தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
இலங்கையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சர்வதேச ரோலர் ஸ்கேட் பேஸ்கட் பால் போட்டி கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இலங்கை கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான டி சீரிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து தமிழகம், அரியானா, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளுக்கும் மூன்று போட்டிகள் நடைபெறும். அதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் வெற்றியளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்திய அணி 20 புள்ளிகளும் இலங்கை அணி 12 புள்ளிகளும் பெற்றது. இதன் மூலம் ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா பும்ரா..? வெளியான முக்கிய அறிவிப்பு
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அரியானா ,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் இலங்கைக்கு சென்றனர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினர் இலங்கையில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும் விமான நிலையம் வந்த வீரர்களுக்கு உறவினர்கள் இனிப்புகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர், ரோலர் ஸ்கேட்டிங் பாஸ்கெட் பால் போட்டிக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் மைதானங்கள் அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
What's Your Reaction?






