Champion Trophy: இங்கிலாந்துக்கு எதிரான போட்டி - ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8வது லீக் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில், பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்க்கிய ஆப்கன் வீரர்கள், அதிரடியாக விளையாடினர். அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஆப்கன் வீரர் இப்ராகிம் ஜட்ரன் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 177 ரன்கள் குவித்து, சாம்பியன்ஸ் தொடரில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதையடுத்து, 326 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் ஜோ ரூட் தனி ஆளாக போராடி சதமடித்து அசத்தினார். 49.5ஆவது ஓவரில் இங்கிலாந்து அணி, 317 ரன்களை மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி, 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மேலும், பங்கேற்ற 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
What's Your Reaction?






