கமல், விஷால், சிம்பு, தனுஷ் ஆகிய 4 பேரின் படங்களுக்கு தடை: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

நடிகர்கள் கமல்ஹசன், விஷால், சிம்பு, தனுஷ் ஆகியோர் படங்களுக்கு வருங்காலத்தில் ஒத்துழைப்பு கிடையாது என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள்சங்கம் அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Jul 8, 2024 - 14:16
Jul 8, 2024 - 15:22
 0
கமல், விஷால், சிம்பு, தனுஷ் ஆகிய 4 பேரின் படங்களுக்கு தடை: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி
Tamil Movie Producer Against Actor Kamal Haasan, Simbu, Vishal and Dhanush
கமல், விஷால், சிம்பு, தனுஷ் ஆகிய 4 பேரின் படங்களுக்கு தடை: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

கமல், விஷால், சிம்பு, தனுஷ்க்கு தடை
தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு அதிரடி ஏன்?

நடிகர்கள் கமல்ஹசன், விஷால், சிம்பு, தனுஷ் ஆகியோர் படங்களுக்கு வருங்காலத்தில் ஒத்துழைப்பு கிடையாது என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள்சங்கம் அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த முடிவுக்கு காரணம் என்ன என்று விசாரித்தபோது கிடை த்த தகவல் இதோ


சென்னையில் கடந்த வாரம் கூடிய  தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் 3 முடிவுகள் பெப்சி மற்றும் சம்பளம், படப்பிடிப்பு சம்பந்தப்பட்டது. நாலாவது தீர்மானத்தில், இனி வருங்காலத்தில் 4  முன்னணி நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று கூறப்பட்டது. அந்த தீர்மானம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த 4 நடிகர்கள், அவர்கள் செய்த தவறு என்ன? இந்த கடுமையான நடவடிக்கை என்ன என்று விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ், கதிரேசன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் கூடிய  அந்த செயற்குழுவில் கமல்ஹாசன், விஷால், சிம்பு, தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க விவாதிக்கப்பட்டது. கடைசியில் இந்த 4 நடிகர்களின் அடுத்த படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சங்கம் வெளியிட்ட அறிக்கையில், இவர்கள் பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. 4 முன்னணி நடிகர்கள் என்று மட்டும் குறிப்பிடப்பட்டது. 

குறிப்பாக, கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க, இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் புகார்தான் காரணம். இந்த நிறுவனம் தயாரித்த உத்தமவில்லன் படத்தால், லிங்குசாமி தரப்புக்கு பல கோடி இழப்பு. அதை ஈடுகட்ட, அடுத்து ஒரு பட கால்ஷீட்டை கமல்ஹாசன் தருவதாக உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், இன்றுவரை லிங்குசாமிக்கு கமல் கால்ஷீட் கொடுக்கவில்லை.பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடைந்தன. இதனால், தயாரிப்பாளர் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்த காலத்தில் சங்க நிதியை தவறாக பயன்படுத்தினார். சங்கத்துக்கு பல கோடி இழப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு காரணமாக விஷால் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்துக்குபின் மீண்டும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க சிம்பு ஓகே சொன்னார். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், தயாரிப்பாளர் ஐசரி  கே. கணேஷ் கொடுத்த புகார் காரணமாக சிம்பு படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, என். ராமசாமி கம்பெனிக்கு கால்ஷீட் கொடுக்காமல் பல ஆண்டுகளாக தனுஷ் டிமிக்கி கொடுத்து வருவதாலும், அதனால், கம்பெனிக்கு பொருளாதார ரீதியாக பல பாதிப்பு என்பதாலும் தனுஷ் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


 இந்த முடிவுகள் உடனே அமலுக்கு வந்தாலும் இந்த 4 நடிகர்களுக்கு உடனடி பாதிப்பு இல்லை. இப்போது இந்தியன் 3, இந்தியன்3, தக் லைப் படங்களில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த தீர்மானத்தால் இந்த படங்களுக்கு, ரிலீசுக்கு பாதி்ப்பு இல்லை. அடுத்து நடிக்கும் படத்துக்குதான் பாதி்ப்பு ஏற்படும். கமலே தனது படத்தை தயாரித்து நடித்தால் என்ன நடக்கும் என்று தெரியாது. அதேபோல், துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடிக்கப்போகிறார். அந்த படத்தின் த யாரிப்பாளர் அவரே. இதனால், அவருக்கும் பாதிப்பு இல்லை. குபேரா, ராயன் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் தனுஷ், தக்லைப், கமல்ஹாசன் த யாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. ஆகவே, இ்ப்போதைக்கு இவர்களுக்கு பாதிப்பு இல்லை. அடுத்து நடிக்கும் படங்களுக்குள் இந்த பிரச்னையை தீர்க்க, சம்பந்தப்பட்ட 4 நடிகர்கள் முன் வராவி்ட்டால், உறுதி மொழி கொடுக்காவிட்டால், இவர்கள் நடிக்கும் படங்களுக்கு சங்க ஒத்துழைப்பு, பெப்சி ஒத்துழைப்பு கிடைக்காது. அப்போது இவர்களின் படப்பிடிப்பு நடக்காது. தொழிலாளர்கள், கேமரா உள்ளிட்ட சாதனங்கள் கிடைக்காது. பெப்சியின் 23 சங்கம் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காது. ஆனாலும், அதற்குள் ஏதாவது வழியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும். நாலுபேருமே முன்னணி நடிகர்கள் என்பதால் தடை என்பது சாத்தியமில்லை. இது ஒருவகையான மிரட்டல், செக். அதனால்தான் பெயர் குறிப்பிடப்படாமல் அறிக்கை வந்துள்ளது என்கிறார்கள். கடந்த வாரம் சென்னையில் நடந்த இந்தியன் 2 பிரஸ்மீட்டில் தடை குறித்து கேட்கப்பட, இங்கே அது குறித்து பேச முடியாது என்று கமல்ஹாசன் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow