இனி யாரும் தப்பிக்க முடியாது.. கொல்கத்தா கொடூரம் எதிரொலி... தமிழக மருத்துவத்துறை அதிரடி அறிவிப்பு....!

கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கனரகம். 

Sep 3, 2024 - 14:43
Sep 4, 2024 - 15:41
 0
இனி யாரும் தப்பிக்க முடியாது.. கொல்கத்தா கொடூரம் எதிரொலி... தமிழக மருத்துவத்துறை அதிரடி அறிவிப்பு....!

கொல்கத்தா கடந்த 9 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ஒருபக்கம் விசாரணை நடைபெற்று வந்தாலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைந்து வழங்கவும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த கோரிக்கைகளெல்லாம் முன்வைத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதுகுறித்து நடவடிக்கைள் எடுக்க தமிழக மருத்துவத்துறை முன்வந்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குநர் ராஜமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும், மருத்துவமனைகளின் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும், மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதி, பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதோடு, மருத்துவமனையில் இரவு நேர பாதுகாப்பு உறுதி செய்ய மருத்துவமனை சுற்றி மின்விளக்குகள் அமைக்க வேண்டும், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் மருத்துவ பணியாளர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதாகையை வைக்க வேண்டும் உள்ளிட்ட புதிய உத்தரவை உடனடியாக அமல்படுத்த இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அதிகாரி வருவாய் நிர்வாக அதிகாரிகளுக்கும் தமிழக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் ராஜமூர்த்தி சுற்றிக்கை அனுப்பியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow