மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு..உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்

Mar 19, 2025 - 17:45
Mar 19, 2025 - 19:31
 0
மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு..உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருதமலை முருகன் கோவில்

கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழ்க் கடவுளான முருகனின் கோவிலில் குட முழுக்கின் போது, தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி, உப்பிலிபாளையத்தை சேர்ந்த டி.சுரேஷ் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், குடமுழுக்கின் போது, வேள்வி குண்ட நிகழ்வுகளில் வேள்வி ஆசிரியராக தமிழ் சைவ மந்திரங்கள் ஓதுவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அறநிலையதுறைக்கு மனு அளித்ததாக கூறியுள்ளார்.

Read more: டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்றீர்கள்...ஆனால்...அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்

தமிழில் குடமுழுக்கு

தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more: எண்ணெய் கசிவு வழக்கு... மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow