டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்றீர்கள்...ஆனால்...அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்

திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அரசியல் கட்சி, சோதனை எனும் பெயரில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை நடத்தி அவசரகதியில் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டிருப்பதாக aமைச்சர் கூறினார்.

Mar 19, 2025 - 15:58
Mar 19, 2025 - 15:58
 0
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்றீர்கள்...ஆனால்...அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என கூறிவிட்டு புதுப்புது விதமான டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்து வருவதாக பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

ரத்தசோகையை தடுக்கும் மாத்திரைகள்

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பெண்களுக்கான தனி பட்ஜெட் வேண்டும் என தனது முதல் ஆண்டு உரையிலேயே குறிப்பிட்ட நிலையில் அது தற்போதுவரை நடைபெறவில்லை என பேசினார். 

நகர்ப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் 20 சதவிகிதம் குழந்தைகளுக்கு ரத்தசோகை இருப்பதாகவும் அவர் கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரத்தசோகையை தடுக்கும் மாத்திரைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவதாக பேசினார். 

சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என சொல்லிவிட்டு புதுப்புதுவிதமான மதுக்கடைகளை திறந்து வருவதாகவும் கூறினார். அப்போது பேசிய மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அரசியல் கட்சி, சோதனை எனும் பெயரில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை நடத்தி அவசரகதியில் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டிருப்பதாக கூறினார். 

மேலும் அந்த சோதனை எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதல் தகவல் அறிக்கை எப்போது பதியப்பட்டது என்று சொல்லாமல் நடைபெறும் சோதனையின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது எனவும் பதிலளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow