Cinema Strike : பசி, விரக்தி, கோடிகளில் இழப்பு... சினிமா ஸ்ரைக்கை தடுப்பாரா உதயநிதி

Minister Udhayanidhi on Tamil Cinema Strike : ஸ்டிரைக் என்பது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். கோடிக்கணக்கான வியாபாரம் முடங்கும். இதெல்லாம் சினிமா தொழிலுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். சினிமா துறையில் இருந்த உதயநிதி அமைச்சராக, அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பி்ல் இருப்பதால் சினிமா ஸ்டிரைக் நடக்க அவர் சம்மதிப்பாரா

Jul 30, 2024 - 11:37
Jul 30, 2024 - 13:01
 0
Cinema Strike : பசி, விரக்தி, கோடிகளில் இழப்பு...  சினிமா ஸ்ரைக்கை தடுப்பாரா உதயநிதி
Minister Udhayanidhi on Tamil Cinema Strike

Minister Udhayanidhi on Tamil Cinema Strike : ‘‘நவம்பர் 1ம் தேதி முதல் தமிழ் சினிமா ஸ்டிரைக். சினிமா தொடர்பான எதுவும் நடக்க கூடாது. ஆகஸ்ட் 16ம் தேதிக்குபின் புதுப்படங்களுக்கு பூஜை போடக்கூடாது. அக்டோபர் 30ம் தேதிக்குள் அனைத்து படப்பிடிப்பு பணிகளையும் முடித்துவிட வேண்டும்’’  என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்ல, நடிகர் தனுசுக்கு செக். முன்னணி நடிகர்களின் படங்களை 8 வாரங்களுக்குபின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை அறிக்கையாக கொடுத்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை கலந்த கூட்டு கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதால், இதெல்லாம் நடந்துவிடுமோ? ஸ்டிரைக் வந்தால் நம்ம நிலைமை என்னாவது என்று சினிமா நடிகர்களும், சினிமா தொழிலாளர்களும் பதறிப்போய் உள்ளன.

இது குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்தால் ‘‘கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா நிலவரம் மிகவும் மோசமான இடத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த ஆண்டு படு மோசம். சினிமாவுக்கு தியேட்டர் மூலம் வருமானம் அதிகம்  என்றால், சாடிலைட், ஓடிடி மூலம் கிடைக்கும் வருமானமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு ஓடிடி, சாடிலைட் வியாபாரம் சரியாக நடக்கவில்லை. முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கே இந்த வியாபாரம் ஆகவில்லை. சின்ன படங்களின் நிலை கேட்கவே வே ண்டாம்.

அதனால், பல படங்கள் நஷ்டத்தில் தவித்தன. பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த ஆண்டு 170 படங்கள் ரிலீஸ் ஆனநிலையில், 10 சதவீத படங்கள் கூட வெற்றி பெறவில்லை. 200க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன.  இதற்கு முடிவு கட்ட, பல கட்ட கூட்டங்களுக்குபி்ன்  இந்த முடிவை சினிமா சங்கங்கள் எடுத்துள்ளன. முதலில் சினிமா தயாரிப்பதை நிறுத்திவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், இந்த அதிரடி அறிவிப்புகள்’ என்கிறார்கள்.

சரி, உண்மையிலே சினிமா ஸ்டிரைக் வருமா? என்று கேட்டால், ‘‘ஸ்டிரைக் என்பது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். கோடிக்கணக்கான வியாபாரம் முடங்கும். இதெல்லாம் சினிமா தொழிலுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். சினிமா துறையில் இருந்த உதயநிதி அமைச்சராக, அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பி்ல் இருப்பதால் சினிமா ஸ்டிரைக் நடக்க அவர் சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறியே. ஸ்டிரைக் என்பது அரசுக்கும் கெட்டப்பெயர். எதிர்க்கட்சிகள் அறிக்கை விடுவார்கள், அரசு மீது குற்றம் சுமத்துவார்கள். அதனால், சினிமா ஸ்டிரைக் நடத்த அரசு அனுமதிக்காது’’ என்கிறார்கள்

படப்பூஜை தடை, சினிமா படப்பிடிப்புக்கு கட்டுப்பாடு என்பது எந்தவகை பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த சினிமாகாரர்களிடம் கே ட்டால்,
‘‘சினிமா பூஜை என்பது தொடக்கவிழா, அது நடந்தால்தான் படப்பிடிப்பு நடக்கும். பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். அதனால், அதை தடுப்பது சரியில்லை. படப்பிடிப்பை நிறுத்தினாலும் இதே பிரச்னை. தமிழ் சினிமா என்பது தமிழ் நடிகர்களை மட்டும் சம்பந்தப்படுத்தியது இல்லை. மற்ற மாநில நடிகர்களும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு பாதிக்கப்பட்டால், அவர்கள் கால்ஷீட்டில் பிரச்னை வரும். தயாரிப்பாளர்களுக்கு பல கோடி இழப்பு ஏற்படும். மீண்டும் அவர்கள் கால்ஷீட் வாங்க, படப்பிடிப்புதள அனுமதி வாங்க பல பிரச்னைகள். அதனால், இதெல்லாம் நடைமுறைக்கு வந்தால் ஏகப்பட்ட பாதிப்புகள்’ என்கிறார்கள்

தனுஷ் மீது ஏன் தடை என்றால், ‘‘அது தடை அல்ல. ஒருவகை செக். சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கால்ஷீட் கொடுக்கவில்லை என்று அவர் மீது புகார். தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமியிடமும் அவர் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். அதனால், அவருக்கு நெருக்கடி. அதேசமயம், வெளிமாநில தயாரிப்பாளர், கார்ப்பரேட் நிறுவனங்களை இந்த கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்தாது. அதனால், தனுஷ் மீது பெ ரியளவில் நடவடிக்கை எடுக்க சான்ஸ் இல்லை. அதற்குள் தனுசும் சில சமரசங்களை உருவாக்கலாம்’’என்கிறார்கள்

சினிமா ஸ்டிரைக் நடக்குமா? நடக்காதா என்றால், தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்த காலத்தில் இப்படிப்பட்ட ஸ்டிரைக் நடந்தது. சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. ஆனாலும், அந்த ஸ்டிரைக்கால் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தயரிப்பாளர், நடிகர், நடிகைகள், சினிமா தொழிலாளர்களுக்குதான் பாதிப்பு. இந்த முறையும் நடக்கும் என்பதால் ஸ்டிரைக் பலரும் விரும்பவில்லை. ஆகவே, இது ஒருவகை எச்சரிக்கை, ஸ்டிரைக் நடக்குமா?நடக்காதா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

தவிர, இந்த ஸ்டிரைக் அறிவிப்பில் நடிகர் சங்கம், சினிமா தொழிலாளர் சங்கமான பெப்சியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. அதனால், இந்த 2 சங்க நிர்வாகிகள் ஸ்டிரைக்கை எதிர்க்கிறார்கள். காரணம், ஸ்டிரைக்கால் அவர்களுக்குதான்  வேலை இழப்பால் அதிக பாதிப்பு.  பசி, விரக்தி, கோடிகளில் இழப்பு உருவாகும். ஸ்டிரைக் தவிர்க்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஸ்டிரைக்கால் இப்ப படம் தயாரித்து வரும் பல தயாரிப்பாளர்களுக்கும் பல கோடி இழப்பு ஏற்படும. கடைசியில் அவர்கள் அரசிடம், உதயநிதியிடம் செ ல்ல வாய்ப்பு. ஆகவே , முடிவு அமைச்சர் உதயநிதி கையில்’’  என்கிறார்கள்.

*

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow