Sonia Gandhi: வயநாடு இடைத் தேர்தல்... பிரியங்காவுக்கு ஆதரவாக சோனிய காந்தி, ராகுல் ரோட் ஷோ!
கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடவுள்ள நிலையில், சோனியாவும் ராகுலும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

வயநாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் பேட்டியிட்டார் ராகுல் காந்தி. இந்த இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிப் பெற்ற நிலையில், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இந்தத் தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேவேகத்தில் வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பது உறுதியாகிவிட்டது. அதன்படி, காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இடதுசாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பாஜக கூட்டணியில் இருந்து நவ்யா ஹரிதாசும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (அக்.21) வயநாடு செல்கிறார். அப்போது பிரியங்கா காந்தியுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் செல்வது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் வயநாட்டுக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை பிரியங்கா. ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் வர உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் செல்கின்றனர். வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக கல்பெட்டாவில் நடைபெறும் ரோட் ஷோவிலும் இருவரும் கலந்துகொள்ள உள்ளனர். பிரியங்கா காந்தி வயநாட்டில் 10 நாட்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
பிரியங்காவுக்கு ஆதரவாக வயநாடு செல்லும் ராகுலும் சோனியா காந்தியும் நாளை அங்கு நடைபெறும் பிரம்மாண்டமான ரோட் ஷோவில் பங்கேற்கவுள்ளனர். 2019, 2024 தேர்தல்களில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிப் பெற்றிருந்தார். இதனால், தற்போது நடைபெறும் இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பிரியங்கா வெற்றிப் பெற்றால், தற்போது நாடாளுமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு பிறகு காந்தி குடும்பத்தின் மூன்றாவது எம்.பி.யாக அவர் இடம்பெறுவார்.
What's Your Reaction?






