Amaran Review: சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட்... அமரன் டிவிட்டர் விமர்சனம் இதோ!
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள அமரன், வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் மூவியாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் முதன்முறையாக ராணுவ அதிகாரியாக நடித்துள்ளதால், இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி இன்று வெளியான அமரன் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
மேஜர் முகுந்த் போன்ற ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பது கொஞ்சம் சிரமமானது. ஆனால், சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை, மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் மற்றொரு டாப் ஹீரோவாக வருவதற்கு வெகு தொலைவில் இல்லை. இப்படி ஒரு தலைசிறந்த படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டுகள். சாய் பல்லவிவின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. அமரன் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மூவி, ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம் என நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல், அமரன் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ள Let's X OTT GLOBAL தளம், 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது. அமரன் படத்தில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ட்ரிபியூட் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சாய் பல்லவிக்கு அவரது கரியரில் அமரன் சிறப்பான திரைப்படம், இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கேரக்டரில் உருக வைத்துள்ளார். ஜிவி பிரகாஷின் பிஜிஎம் அமரனுக்கு பலம் சேர்த்துள்ளது, ஃபேமிலி சென்டிமெண்ட் சீன்ஸ், எமோஷனல் சீன்ஸ் நன்றாக கனெக்ட் ஆகியுள்ளது என விமர்சனம் செய்துள்ளது.
அமரன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ள சோஷியல் மீடியா ட்ராக்கர் கிறிஸ்டோபர் கனகராஜ், அமரன், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு சரியான அஞ்சலி. சிவகார்த்திகேயனின் Transformation-ம், நடிப்பும் சூப்பர். சிந்துவாக சாய் பல்லவி அருமையாக நடித்துள்ளார். காதல் காட்சிகள் அழகாகவும், ஜிவி பிரகாஷின் பின்னணி இசை அட்டகாசமாகவும் உள்ளன. அதேபோல் புரொடக்ஷன் வேல்யூ பிரம்மாண்டமாக உள்ளது, ஃபேமிலி சென்டிமெண்ட் சீன்ஸ் நீளம் அதிகம், முதல் பாதி டீசண்ட், இரண்டாவது பாதியும் கிளைமேக்ஸும் எமோஷனல் என ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல், சோஷியல் மீடியா ட்ராக்கர் அமுதபாரதியும் அமரன் படத்திற்கு பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளார். அமரன் முதல் பாதியை விட இரண்டாம் பாதி டீசண்டாக உள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் கேரக்டரில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். முக்கியமாக சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி போர்ஷன் அருமை, ரசிகர்களுக்கு நன்றாக கனெக்ட் ஆகிறது. ஆக்ஷன், எமோஷனல் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், திரைக்கதை கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. ஜிவி பிரகாஷின் மின்னலே பாடலின் பின்னணி இசையும் சூப்பர். அதேபோல், சிவகார்த்திகேயன் அவரது மகள் போர்ஷன் க்யூட், ஒட்டுமொத்தமாக ஆவரேஜ் மூவியாக உருவாகியுள்ள அமரன், தியேட்டரில் பார்க்கலாம் என 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.
What's Your Reaction?