கணவர் தயாரிப்பாளர்...கதைநாயகியாக சிம்ரன்.... ஐந்து மொழிகளில் உருவாகும் the last one

சிம்ரன் காலத்தில் நடிக்க வந்த ஹீரோயின்கள் பலர் இப்போது இல்லை. அம்மா, அக்கா, அண்ணி வேடத்துக்கு பலர் சென்றுவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் இப்போதும் சிம்ரன் கதைநாயகியாக நடித்து வருகிறார்.

Sep 7, 2024 - 11:30
Sep 7, 2024 - 16:27
 0
கணவர் தயாரிப்பாளர்...கதைநாயகியாக சிம்ரன்....       ஐந்து மொழிகளில் உருவாகும் the last one
சிம்ரன் நடிக்கும் தி லாஸ்ட் ஒன்

அந்தகன் படத்தில் சற்றே வில்லத்தனமாக நடித்த சிம்ரன் நடிப்பு பாராட்டப்பட்டது. ‘‘நீங்கதான் படத்துல ஹீரோயின்’’ என்று சிம்ரனை நேரிலும், சோஷியல்மீடியாவிலும் பாராட்டினார்கள். அந்த உற்சாகமோ என்னவோ, தி லாஸ்ட் ஒன் என்ற படத்தில் கதைநாயகியாக நடிக்கிறார் சிம்ரன். விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த படத்துக்கான அறிவிப்பும், சிம்ரனின் பர்ஸ்ட் லுக்கும்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து விசாரித்தால், சிம்ரன் சினிமாவில் தனது  28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம, இந்தி மொழிகளில் 100 படங்களுக்குமேல் நடித்துவிட்டார். இப்போது  லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமான தி லாஸ்ட் ஒன்னில் நடிக்கிறார். இது  திகில் மற்றும் பேன்டசி கலந்த கதையாக உருவாகிறது. ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் இந்த படத்தை தயாரிப்பவர்  தீபக் பஹா. இவர் வேறு யாருமல்ல, இவர் சிம்ரனின் காதல் கணவர்தான். சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இந்த படத்தை இயக்குகிறார். இன்னும் விரிவாக சொன்னால் இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் வருகிறார். 

சமீபத்தில் சிம்ரன்  நடித்த 'குல்மோஹ‌ர்', 'ராக்கெட்ரி' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றது. அந்தகனிலும் நல்ல பெயர். ராக்கெட்ரி தேசியவிருது வென்றது. அந்த உற்சாகத்தில் இந்த படத்தை தொடங்கியுள்ளார். சிம்பிளாக இன்று பூஜை நடந்தது. மற்ற நடிகர்கள் மற்றும் மற்ற படக்குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சிம்ரன் காலத்தில் நடிக்க வந்த ஹீரோயின்கள் பலர் இப்போது இல்லை.  அம்மா, அக்கா, அண்ணி வேடத்துக்கு பலர் சென்றுவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் இப்போதும் சிம்ரன் கதைநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழி்ல் நயன்தாரா, ஜோதிகா, திரிஷா, கீர்த்திசுரேஷ், தமன்னா, ஐஸ்வர்யாராஜேஷ் போன்றவர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்கிறார்கள். அந்தவகையில் சிம்ரனும் களம் இறங்கிவிட்டார்கள். இப்போது திரில்லர், ஆக் ஷன் படங்களுக்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்பு. இந்திய மொழிகள் பலவற்றில் சிம்ரனுக்கு நல்ல அறிமுகம். அதனால், 5 மொழிகளில் படத்தை தயாரிக்கிறார். 5 மொழி சாடிலைட், 5 மொழி ஓடிடி, 5 மொழி இசை உரிமை, 5 மொழி தியேட்டர் உரிமை, மற்ற சினிமா வியாபாரத்தை கணக்கிட்டால் இந்த படம் லாபகரமாகவே இருக்கும்.அதனால், தனது கணவர் பெயரில் அவரே தயாரிக்கிறார்’ என்கிறார்கள். இதற்கு முன்பு கோவில்பட்டிவீரலட்சுமி உள்ளிட்ட சில படங்களில் சிம்ரன் இப்படி கதைநாயகியாக நடித்துள்ளார்.சிம்ரன் 2 மகன்களும் பெரியவர்களாக வளர்ந்து வருகிறார்கள். விரைவில் அவர்களும் சினிமாவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow