சென்னை: சகாப்தம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அதனைத்தொடர்ந்து மதுரை வீரன் படத்தில் நடித்த சண்முக பாண்டியனுக்கு, அதன்பின்னர் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திரையுலகில் பல சோதனைகளையும் தடைகளையும் கடந்து முன்னணி நட்சத்திரமாக மாஸ் காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். அதோடு இல்லாமல் இயக்குநர்கள், நடிகர்கள் உட்பட ஏராளமானோருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கொடுத்து அவர்களையும் வளர்த்துவிட்டார்.
சினிமாவில் நடித்து சம்பாதித்த பணம் மூலம் பலருக்கும் உதவி செய்துள்ளார் விஜயகாந்த். அதேபோல் அவரது ஆபிஸ்க்கு, எப்போது யார் சென்றாலும் சாப்பாடு கொடுக்காமல் திருப்பி அனுப்பமாட்டார். இதனாலேயே கேப்டனை கோலிவுட்டின் கறுப்பு எம்ஜிஆர் என பலரும் கொண்டாடினர். மேலும், விஜய், சூர்யா ஆகியோரின் ஆரம்ப காலத்தில், அவர்களுக்காக சில படங்களில் கேமியோவாக நடித்துக்கொடுத்தார் கேப்டன். அப்பேற்பட்ட விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
விஜயகாந்த் மறைந்த பின்னர், அவருக்கு அஞ்சலி செலுத்திய ராகவா லாரன்ஸ், கேப்டனுக்காக சண்முக பாண்டியனின் புதிய படத்தில் தான் நடிக்கிறேன் என வாக்கு கொடுத்திருந்தார். அவர் சொன்னபடி விரைவில் சண்முக பாண்டியன், ராகவா லாரன்ஸ் கூட்டணியில் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், சண்முக பாண்டியனின் புதிய படம் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி பொன்ராம் இயக்கும் கொம்புசீவி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் சண்முக பாண்டியன்.
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, விஜய் சேதுபதியின் DSP ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் பொன்ராம். கிராமத்துப் பின்னனியில் கமர்சியலாக படங்கள் எடுப்பதில் தனித்துவமானவர் பொன்ராம். இப்போது அவர் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். அதேபோல், கொம்புசீவி படத்தில் சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
விஜயகாந்த் மூலம் சினிமாவில் அறிமுகமான சரத்குமார், இப்போது கேப்டனுக்காக அவரது மகன் சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தில் கமிட்டாகியுள்ளார். 1996ம் ஆண்டுகளில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதிகளில் நடந்த கதையை பின்னணியாக வைத்து உருவாகும் இந்தப் படம், சண்முக பாண்டியனுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள கொம்புசீவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள்
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) October 12, 2024
#StarCinemas @mukesh_chelliah Presents #Kombuseevi #கொம்பு சீவி @realsarathkumar #ShanmugaPandian
Dir by @ponramVVS#Tharnika #KalkiRaja @kaaliactor @balasubramaniem @thisisysr @Dponnuraj @saravanaabiram3… pic.twitter.com/lNiCRl4Rz5