இலங்கை கடற்படையால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாக கைது செய்யப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து இலங்கை அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கப்பட்டது.
அதன்படி 2014ஆம் ஆண்டில் 787 பேர், 2015ஆம் ஆண்டில் 454 பேர், 2016ஆ ம் ஆண்டில் 290 பேர், 2017ஆம் ஆண்டில் 453 பேர், 2018ஆம் ஆண்டில் 148 பேர், 2019இல் 203 பேர், 2020இல் 59 பேர், 2021இல் 159 பேர், 2022ஆம் ஆண்டில் 237 பேர், 2023ஆம் ஆண்டில் 230 பேர், 2024 இல் ஜூலை 29 வரை 268 பேர் என மொத்தம் 3ஆயிரத்து 288 பேர் கடந்த 10 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல் 10 ஆண்டுகளில் 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 365 படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதாகவும், 21 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.