#BREAKING | "தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை" - நடிகை குட்டி பத்மினி குற்றச்சாட்டு| Kumudam News 24x7
தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும் பலர் தற்கொலை செய்ததாகவும் நடிகை குட்டி பத்மினி பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய நடிகையும் தொடர் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, தமிழ் திரையுலகில் பாலியல் வன்கொடுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களில் பெண் நடிகைகளிடம் இயக்குநர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பலர் புகாரளிக்க முன்வருவதில்லை எனவும் பாடகி சின்மயி, நடிகை ஸ்ரீரெட்டி போன்று புகார் கொடுத்தால் திரையுலகில் இருந்து புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தவர்களை, நடிகர் சங்க முன்னாள் தலைவர் ராதாரவி உறுப்பினர் அட்டை கூட வழங்காமல் புறக்கணித்ததாகவும் குட்டி பத்மினி கூறியுள்ளார்.
ஸ்ரீரெட்டிக்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டை மறுக்கப்பட்டு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூட தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் ஆதாரம் எங்கே என சுரேஷ் கோபி கேட்பது எப்படி எடுத்துக் கொள்வது? உண்மை கண்டறியும் சோதனை தான் நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?