#BREAKING | பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம் வாபஸ் | Kumudam News 24x7
பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்ஐடி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவிகள் விடுதியில், மின் விநியோகத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விடுதி நிா்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளரை பழுது நீக்கும் பணிக்கு அழைத்துள்ளனா்.
இதைத் தொடர்ந்து, பணியில் ஈடுபட்ட எலக்ட்ரீசியன் கதிரேசன், அறையில் தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவி அலறிய சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மாணவிகள் திரண்டு வந்தனா். இதையடுத்து, திருவெறும்பூா் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த எலக்ட்ரீஷனை அதிரடியாக கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
What's Your Reaction?