மீண்டும் அரியாசணத்தில் செந்தில் பாலாஜி.. அதிரடி மாற்றத்தால் அதிர்ந்த அமைச்சரவை
சிறை வாசம் முடிந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி என தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து சிலர் விடுவிப்பு, சிலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி என்று அமைச்சரவை மாற்றத்தில் அதிரடிக்கு பஞ்சம் இல்லை...
தமிழக அமைச்சரவையில் மாற்றம் எப்போது என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் சிறை வாசம் முடிவுக்கு வந்த பின் தற்போது அந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாக்கா மாற்றம், சிலரின் அமைச்சர் பதவி பறிப்பு, சிலருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி என்று பரபரப்புக்கு சிறிதும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்று பயணத்திற்கு முன் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று திமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, பழுக்கவில்லை என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தநிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த மறு நாளே, இதற்காகவே காத்திருந்தார் போல தற்போது அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன்படி, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆகிறார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அது மட்டுமல்லாமல் சிறையில் இருந்து வெளி வந்துள்ள செற்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைசசரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கோவி.செழியன், சேலம் ராஜேந்திரன், ஆவடி ச.மு.நாசர், ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கக உள்ளனர். அமைச்சர் கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டு துறையும், அமைச்சர் ராஜ கண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக சிலருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு இருக்கு அதே வேலையில், சிலரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மனோ.தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசு தலைமைக் கொறடாவாக இருந்த கோவி.செழியன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமச்சந்திரன், அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கும் நிலையில், ஞாயிறு மாலை 3:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






