CM Stalin : சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்... அமெரிக்க முதலீடுகள் மொத்த விவரம் இதோ!
CM Stalin Return To Chennai : 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். முதலமைச்சரின் இந்த பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.
CM Stalin Return To Chennai : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்க தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் இந்த பயணம் அமைந்தது. 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அவருக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என். நேரு, எ.வ வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட அரசு உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.
முன்னதாக சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இந்த பேச்சுவார்த்தை மூலம், 18 முன்னணி நிறுவனங்கள், தமிழகத்தில் ரூ.7,616 கோடி முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் தமிழகத்துக்கு கிடைத்துள்ள முதலீடுகளை பார்க்கலாம்.
மைக்ரோசிப் (செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்) ரூ.250 கோடி முதலீடு - 1500 பேருக்கு வேலைவாய்ப்பு - சென்னை
நோக்கியா (ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்) - 450 கோடி முதலீடு - 100 பேருக்கு வேலைவாய்ப்பு - சென்னை
ஈஸ்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் (செமிகண்டக்டர்) - 150 கோடி முதலீடு - 300 பேருக்கு வேலைவாய்ப்பு - சூலூர்
பேபால் (செயற்கை நுண்ணறிவு மையம்) - 1000 பேருக்கு வேலைவாய்ப்பு - சென்னை
இன்பிங்ஸ் ஹெல்த்கேர் (உலகளாவிய விநியோக மையம்) - 50 கோடி முதலீடு - 700 பேருக்கு வேலைவாய்ப்பு - மதுரை
அப்ளைடு மெட்டீரியல்ஸ் (செமிகண்டக்டர்) - 500 பேருக்கு வேலைவாய்ப்பு - சென்னை
ஓமியம் (பசுமை நைட்ரஜன் உற்பத்தி) - 400 கோடி முதலீடு - 500 பேருக்கு வேலைவாய்ப்பு - செங்கல்பட்டு
ஈட்டன் (உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம்) - 200 கோடி முதலீடு - 500 பேருக்கு வேலைவாய்ப்பு
ட்ரில்லியன்ட் (உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம்) - 2000 கோடி முதலீடு – 1000 பேருக்கு வேலைவாய்ப்பு
விஷய் பிரிஷிஷன் (சென்சார்ஸ், டிரான்ஸ்டியூசர்ஸ்) - 100 கோடி முதலீடு - காஞ்சிபுரம்
லிங்கன் எலக்ட்ரிக் (ஆராய்ச்சி, மேம்பாடு) - 500 கோடி முதலீடு - செங்கல்பட்டு
விஸ்டியன் (மின்னணு உற்பத்தி மையம்) - 250 கோடி முதலீடு - சென்னை, கோவை
ஜாபில் (மின்னணு பொருட்கள் உற்பத்தி) - 2000 கோடி முதலீடு - 5000 பேருக்கு வேலைவாய்ப்பு - திருச்சி
ராக்வெல் ஆட்டோமேஷன் (மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கம்) - 666 கோடி முதலீடு - 365 பேருக்கு வேலைவாய்ப்பு - காஞ்சிபுரம்
அஷ்யூரன்ட் (உலகளாவிய திறன் மையம்) - 200 கோடி முதலீடு - 500 பேருக்கு வேலைவாய்ப்பு - சென்னை
கேட்டர்பில்லர் (கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையம்) - 500 கோடி முதலீடு – திருவள்ளூர், கிருஷ்ணகிரி
RGBSI (மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி) - 100 கோடி முதலீடு - ஓசூர்
இதன் மூலம் மொத்தம் 10,965 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?