தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் சிறுநீரக தானத்திற்காக காத்திருக்கும் நிலையில் ஆண்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே சிறுநீரக தானம் கிடைக்கும் சூழல் இருப்பதாக சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் சார்பில் சிறுநீரக தானம் கொடுத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி மற்றும் சிறுநீரக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சரவணன் சிறுநீரக கொடை கொடுத்தவர்களுக்கு சால்வை அணிவித்து கேடயங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
Read more :உடற்பயிற்சி எப்போது செய்தால் பலனளிக்கும்.. எந்த வழி சிறந்தது..?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் சரவணன், மக்கள் சிறுநீரக வியாதிகள் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக மக்கள் இடையே சிறுநீரக தானம் மற்றும் உறுப்பு தானம் குறித்து இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் தற்போது வரை சிறுநீரகம் செயல் இழப்பு ஏற்பட்டுள்ள சுமார் 40 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் சிறுநீரகத்திற்காக காத்திருப்பில் உள்ளது. இதில் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே சிறுநீரகம் கிடைப்பதாகவும், மீதம் 36 ஆயிரம் பேர் காத்திருப்பில் இருப்பதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறினார்.
மேலும் சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, மூளை சாவு அடைந்தவர்களின் சிறுநீரகம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.வெளிநாடுகளில் மூளை சாவு அடைந்தவர்களின் சிறுநீரகம் அதிகமாக தானம் செய்திருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் அதற்கு தலைகீழாக உயிரோடு இருப்பவர்கள் தான் அதிகம் தானம் செய்ய வருவதால், இந்த சூழல் மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Read more : இந்த வார ஓடிடி ரிலீஸ்: அபிஷேக் பச்சன் தொடங்கி பாசில் வரை.. அனிமேஷன் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!