இந்த வார ஓடிடி ரிலீஸ்: அபிஷேக் பச்சன் தொடங்கி பாசில் வரை.. அனிமேஷன் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

பாலிவுட், ஹாலிவுட், மலையாளம், தெலுங்கு என பழ மொழிகளில் திரையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் இந்த வாரம் OTT வெளியீடுக்கு தயாராக உள்ளது. அனிமேஷன் திரைப்பட பிரியர்களுக்கும் இந்த வாரம் ஒரு ஹேப்பி நியூஸ் காத்திருக்கு.

Mar 13, 2025 - 11:41
 0
இந்த வார ஓடிடி ரிலீஸ்: அபிஷேக் பச்சன் தொடங்கி பாசில் வரை.. அனிமேஷன் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!
march 14 ott releases

இந்த வெள்ளிக்கிழமை, (மார்ச் 14, 2025) அன்று Amazon Prime Video , Netflix, SonyLIV மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்களில் வரும் புதிய OTT வெளியீடுகள் குறித்த பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

1. Be Happy - Amazon Prime Video

அபிஷேக் பச்சன் நடிப்பில் ”Be Happy” திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கருவானது தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான பாசப்பிணைப்பு தான். நடன நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மகளின் ஆசையினை தந்தை நிறைவேற்றினாரா? அதற்கிடையே என்ன சிரமங்களை எதிர்க்கொண்டார் என்பதன் அடிப்படையில் திரைக்கதை அமைந்துள்ளது. ரெமோ டி'சோசா இந்தப்படத்தினை இயக்கியுள்ளார்.

2. The Electric State - Netflix

சைமன் ஸ்டாலென்ஹாக் எழுதிய “ தி எலக்ட்ரிக் ஸ்டேட்” நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். படத்திற்கு நாவலின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. மேற்கு அமெரிக்க நிலப்பரப்பில் ஒரு மர்மமான ரோபோ குழுவானது, ஒரு கடத்தல்காரனுடன் அவரது தம்பியைத் தேடி பயணம் செய்கிறது. இறுதியில் கண்டுபிடித்தார்களா? இல்லையா? இதற்கு நடுவில் என்ன நடந்தது என்பதனை காமெடி,ஆக்‌ஷன் என பன்முகங்களில் திரைக்கதையினை வடிவமைத்துள்ளார்கள். வரவிருக்கும் படத்தின் குழுவில் மில்லி பாபி பிரவுன் , கிறிஸ் பிராட், கே ஹுய் குவான், அந்தோணி மேக்கி மற்றும் வூடி ஹாரெல்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

3.Agent - SonyLIV

அதிரடி ஆக்‌ஷன், த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படம் தான் ஏஜெண்ட். இறுதிவரை உங்களை உங்கள் இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. கதைக்களம் ரிக்கி (அகில் அக்கினேனி) என்ற ஒரு துணிச்சலான செயல்பாட்டாளரைச் சுற்றி வருகிறது, அவர் ஒரு பயங்கரவாத அமைப்பிற்குள் ஊடுருவும் பணியில் ஈடுபட்டுள்ளார். கர்னல் மகாதேவின் (மம்மூட்டி) சந்திப்பு பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. அது என்ன சிக்கல்? கடைசியில் எப்படி முடிகிறது? என்பதை நீங்கள் திரையில் கண்டு என்ஜாய் பண்ணுங்க.

4.Audrey - Netflix

Audrey நெட்ஃபிக்ஸில் வெளியாக உள்ள ஆவணப்படம். ஃபேஷன் ஐகான் ஆகவும், மனிதாபிமானம் கொண்ட பெண்ணாகவும் மற்றும் பிரபலமான நடிகையாகவும் வலம் வந்த ஆட்ரி ஹெப்பர்னின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு இந்த ஆவணப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.

5.Vanvaas - ZEE5

நானா படேகர், உத்கர்ஷ் சர்மா மற்றும் சிம்ரத் கவுர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் “வனவாஸ்” உணர்ச்சிகரமான குடும்ப நாடகமாகும். டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரையும், அவரது மகன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடனான அவரது இயக்கவியலையும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

6. Moana 2 - JioHotstar

அனிமேஷன் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வாரம் செம ஜாக்பாட். மோனாவின் (2016) பெரும் வெற்றியினைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தினை தயாரித்து திரையில் வெளியிட்டார்கள், தயாரிப்புக் குழு. எதிர்ப்பார்த்தது போல் நல்ல வசூலினை ஈட்டிய நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது Moana 2. இப்படத்தின் மையக்கதையானது தன் முன்னோர்களின் வாழ்வியலை அறிந்துக் கொள்ள கடலில் புதிய சாகச பயணத்தை மேற்கொள்கிறார் மோனா. சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அனிமேஷனில் புகுந்து விளையாடியுள்ளது படக்குழு.

Read more: IIFA விருதுகள் 2025: விருதுகளை வாரிக்குவித்த லாபட்டா லேடீஸ் திரைப்படம்

7.பொன்மான் -  JioHotstar

ஜோதிஷ் சங்கர் இயக்கிய 2025 மலையாள நகைச்சுவைத் திரைப்படமான பொன்மான், திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. ஜி.ஆர். இந்துகோபனின் நாவலான நாலஞ்சு செருப்பக்கரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் பாசில் ஜோசப், சஜின் கோபு, லிஜோமோல் ஜோஸ், ஆனந்த் மன்மதன் மற்றும் தீபக் பரம்போல் ஆகியோர் நடித்துள்ளனர்.

8. ரேகைசித்திரம்- ஆஹா OTT

40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு இளம் பெண்ணின் வழக்கு விசாரணை அதிர்ச்சியூட்டும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ​​பல தசாப்தங்களாக கிடப்பில் இருந்த கொலை வழக்கினை தூசித்தட்டினால் பல ரகசியங்கள் வெளிவருகிறது. ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது.

Read more: மர்மர்: இந்த வருடத்தின் மோசமான ஸ்கேமா? படத்தை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow