மர்மர்: இந்த வருடத்தின் மோசமான ஸ்கேமா? படத்தை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் என்றால் அது மர்மர் படம் தான். ஒரு பக்கம் இன்ஸ்டா பிரபலங்கள், சில திரை விமர்சகர்கள் படத்தை ஆஹா., ஒஹோனு புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொருப்புறம் படத்தை பார்த்து விட்டு வரும் பார்வையாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

Mar 12, 2025 - 17:32
 0
மர்மர்: இந்த வருடத்தின் மோசமான ஸ்கேமா? படத்தை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!
murmur movie audience reaction

கடந்த வாரம் திரையங்குகளில், ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் தான் மர்மர். தமிழ் சினிமாவில் புது முயற்சியாக பவுண்ட் புட்டேஜ் முறையில் உருவாகப்பட்டுள்ள திரைப்படம் என கூறப்பட்டதால் திரைப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு இன்னும் கூடியது. தற்போது வரை 4 கோடிக்கு மேல் படம் வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையொட்டி இன்று இப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

அப்போது, இன்ஃபுளூயன்சர்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செஞ்சு இருக்கீங்க. அவர்கள் சொன்னதை கேட்டு படத்திற்கு ஆவலாக சென்ற ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். அதுத்தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வீடியோ வருகிறது. இதுப்போல் பணம் கொடுத்து படத்தை நல்ல விதமாக சொல்ற முறை சரியானதா? தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதா? என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர், “ நாங்கள் தினமும் திரையரங்கு செல்கிறோம். பொது மக்கள் படத்திற்கு 10/10 என்கிற மதிப்பீடு தருகிறார்கள். போலி விமர்சனங்களை நாங்கள் கட்டமைப்பதாக நீங்கள் உணர்ந்தால், நாங்கள் பிரத்யேகமாக ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் 150 பொது பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து படத்தை பார்க்க வையுங்கள். அவர்களின் விமர்சனங்களைக் கேட்கலாம். அவர்கள் படம் நன்றாக இல்லை என்று கூறினால், நாங்கள் படத்தை திரையரங்குகளில் இருந்து அடுத்த நாளை தூக்கிவிடுகிறோம்” என பதிலளித்தார்.

ரியால்டி என்ன?

X வலைத்தளத்தில் ஒரு பயனர், கோலிவுட்டில் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஸ்கேம் என மர்மர் படத்தை வர்ணித்துள்ளார். ஒருமுறைக் கூட பார்க்க இயலாத திரைப்படம் என தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல திரைவிமர்சக சேனல்களுள் ஒன்றான ஸ்கேண்ட் ஷோ எக்ஸ் பக்கத்தில், ”மர்மர் மாதிரி below average படங்களை insta influencers கூவல்கள் மூலமாவோ.. இல்ல, முதல் நாள் எல்லா திரையரங்கையும் ப்ளாக் பண்ணி காலேஜ் பசங்களை வெச்சு கூட்டம் வந்த மாதிரி artificial demand உண்டாக்கி, அடுத்தடுத்த நாட்கள்ல மக்களை அவங்களாவே organicஆ கூட்டம் கூட்டமா வரவெச்சு ஹிட் ஆக்குற trend 2023-ல இருந்தே இருக்கு. இது இண்டஸ்ட்ரிக்கே ரொம்ப ஆபத்து” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொரு பதிவர் ஒருவர், படம் பார்த்த பெண் ஒருவரின் விமர்சன வீடியோவினை குறிப்பிட்டு மர்மர் பரிதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow