IIFA விருதுகள் 2025: விருதுகளை வாரிக்குவித்த லாபட்டா லேடீஸ் திரைப்படம்
ஜெய்ப்பூரில் இரண்டு நாட்களாக நடைப்பெற்ற இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) நிகழ்வில், கிரண் ராவின் இயக்கத்தில் வெளியாகிய லாபட்டா லேடீஸ், கில் ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகளை அள்ளிக் குவித்து அசத்தியது.

IIFA விருது நிகழ்வின் 25-வது பதிப்பு மார்ச் 8 மற்றும் மார்ச் 9 என இருநாட்கள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. புல் புலையா 2 படத்திற்காக கார்த்திக் ஆர்யன் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நிலையில், லாபட்டா லேடீஸ் படத்திற்காக நிதான்ஷி கோயல் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்விற்கு இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட கிரண் ராவின் லாபட்டா லேடீஸ் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.
ஷாருக்கான், கரீனா கபூர், ஷாகித் கபூர் போன்றோர் விருது நிகழ்வில் நடனமாடி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தனர். எந்த படத்திற்கு என்ன விருது என்கிற தகவலை இனி காணலாம்.
கவனத்தை ஈர்த்த Laapataa Ladies:
சிறந்த படம்: லாபட்டா லேடீஸ்
சிறந்த நடிகர்: கார்த்திக் ஆர்யன் (Bhool Bhulaiyaa 3)
சிறந்த நடிகை: நிதான்ஷி கோயல் (Laapataa Ladies)
சிறந்த இயக்குநர்: கிரண் ராவ் (Laapataa Ladies)
சிறந்த வில்லன்: ராகுவ் ஜூயல் (கில்)
சிறந்த துணை நடிகை: ஜான்கி போதிவாலா (Shaitaan)
சிறந்த துணை நடிகர்: ரவி கிஷால் (Laapataa Ladies)
சிறந்த அறிமுக இயக்குநர்: குன்னல் கேமு (மாடகன் எக்ஸ்பிரஸ்)
சிறந்த அறிமுக நடிகை: பிரதீபா ரண்டா (Laapataa Ladies)
சிறந்த அறிமுக நடிகர்: லாக்ஷாய (கில்)
இந்தியாவின் நைட்டிங் கேர்ள்: ஸ்ரேயா
சிறந்த பின்னணி பாடகி: ஸ்ரேயா கோஷல்
சிறந்த பின்னணி பாடகர்: ஜூபின் நாட்டியல்
சிறந்த இசையமைப்பாளர்: ராம் சம்பத் (Laapataa Ladies)
சிறந்த பாடலாசிரியர்: பிரசாந்த பாண்டே (Sajni for Laapataa Ladies)
பிரபலமான பிரிவில் சிறந்த கதை (அசல்) - லாபட்டா லேடீஸ் நாவலுக்காக பிப்லாப் கோஸ்வாமி
சிறந்த கதை (தழுவல்) - ஸ்ரீராம் ராகவன், அரிஜித் பிஸ்வாஸ், பூஜா லதா சுர்தி மற்றும் அனுக்ரிதி பாண்டே (merry christmas)
சிறப்பு எஃபெக்ட்ஸ் (காட்சி) - பூல் புலையா 3-க்காக ரெட் சில்லிஸ் VFX
சிறந்த எடிட்டிங் - லாபட்டா லேடீஸ் படத்திற்காக ஜபீன் மெர்ச்சண்ட்
சிறந்த நடன அமைப்பு - தௌபாவுக்காக போஸ்கோ-சீசர் (bad newz)
சிறந்த ஒளிப்பதிவு - ரஃபே மஹ்மூத் (கில்)
Read more: Kudumbasthan OTT: நமது வீட்டை படம் பிடித்து காட்டிய குடும்பஸ்தன் 5 மொழிகளில் வெளியீடு!
சிறந்த வசனம் - அர்ஜுன் தவான், ஆதித்யா தார், ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே மற்றும் மோனல் தாக்கர் (ஆர்டிகல் 370)
சிறந்த திரைக்கதை - லாபதா லேடீஸ் படத்திற்காக சினேகா தேசா
சிறந்த ஒலிக்கலவை - சுபாஷ் சாஹூ, போலோய் குமார் டோலோய், மற்றும் ராகுல் கர்பே (கில்)
சிறந்த ஒலி வடிவமைப்பு - சுபாஷ் சாஹூ (கில்)
இந்திய சினிமாவில் சிறந்த சாதனை - ராகேஷ் ரோஷன்
லாபட்டா லேடீஸ் திரைப்படம் மட்டும் கிட்டத்தட்ட 9 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. 25 வருடங்களை நிறைவு செய்துள்ள IIFA குழுமத்தின் நிறுவனர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான்.
View this post on Instagram
What's Your Reaction?






