செல்வப்பெருந்தகை மீது குண்டாஸ் போட்டது யார்?.. லண்டன் சொத்து பற்றி பேசலாமா? விடாது விரட்டும் அண்ணாமலை

சாதாரண RBI ஊழியராக இருந்த செல்வ பெருந்தகை லண்டனில் மனைவி பெயரில் பல சொத்துக்கள் சேர்த்தது, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு போன்ற பலவற்றை வெளி கொண்டு வர நான் தயார் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Jul 10, 2024 - 15:20
 0
செல்வப்பெருந்தகை மீது குண்டாஸ் போட்டது யார்?.. லண்டன் சொத்து பற்றி பேசலாமா? விடாது விரட்டும் அண்ணாமலை
Annamalai vs Selvaperunthagai

தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.அண்ணாமலையின் பேட்டி பல அரசியல் கட்சித்தலைவர்களை பதம் பார்க்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

ரவுடி என்று சொன்ன வார்த்தைக்கு செல்வப்பெருந்தகை கொந்தளிக்கவே, அதற்கு பட்டியலிட்டு விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். 

மகாத்மா காந்தி வழி வந்த திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை. 

ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி 

2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e) 

2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி

2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல்

2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்

2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. 

இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்

கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.     

குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. இன்று (ஜூலை 10) தேனியில் அளித்த பேட்டியில் செல்வப்பெருந்தகையை கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, செல்வப்பெருந்தகை 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பாஜகவில் ரவுடிகள் சேருவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதனால் அவரது பின்னணி பற்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.1885ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த மாநிலத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்தவர் மாநில தலைவராக இல்லை.

ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்குமே தெரியும். செல்வப்பெருந்தகையை கைது செய்ய சென்ற போது குதித்து காலை உடைத்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.இன்று பசுத்தோல் போர்த்திய புலியாகதான் காந்தி வழியில் வந்தவன், நான் நல்லவன் என்று சொல்லும் போது வேறு வழியில்லாமல் அவர் மீதான எல்லா வழக்குகளையும் வெளியிடவேண்டியதாயிற்று. 

செல்வப்பெருந்தகை மீது குண்டர் சட்டம் போட்டது ஜெயலலிதாதான். ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ், மத்திய அரசு என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.செல்வ பெருந்தகை மீது சிபிஐ வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. என்னை ரவுடி என்று கூறி விட்டார். நான் கோர்டுக்கு போகப்போகிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம். லண்டனில் நீங்கள் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தையெல்லாம் நான் கொண்டு வருகிறேன். இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையில் எடுக்க நான் தயாராகவே இருக்கிறேன். 

ஒவ்வொருவரிடமும் சண்டை போட்டால் தான் தமிழகத்தின் அரசியல் திருந்தும் என்றால் என்னை அர்ப்பணிப்பதற்கு தயாராகவே உள்ளேன்.ரிசர்வ் வங்கியில் கடை நிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்னவெல்லாம் வாங்கியுள்ளார்?அவரது மனைவி பெயரில் என்ன உள்ளது? ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் எதற்காக மாற்றிப் பேசினார்கள்? என்பது பற்றியெல்லாம் பேசுவோம்.தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும்.அதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போட வேண்டும். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன் என்று கொந்தளிப்புடன் கூறியுள்ளார் அண்ணாமலை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow