செல்லூர் ராஜூ மனைவி கழுத்தில் அதென்ன பச்சைக்கல் முகப்பு சங்கிலி.. இப்படி ஒரு சிறப்பா?

மரகதக்கல் புதன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டது. புதன் கிரகத்தின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மிதுனம், கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் மரகதகல் அணியலாம்.

Jul 17, 2024 - 12:56
Jul 18, 2024 - 10:42
 0
செல்லூர் ராஜூ மனைவி கழுத்தில் அதென்ன பச்சைக்கல் முகப்பு சங்கிலி.. இப்படி ஒரு சிறப்பா?
Sellur Raju

மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவரது அருகில் அமர்ந்திருந்த செல்லூர் ராஜூவின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகை அனைவரையும் கவர்ந்தது. அதன் சிறப்புகள் என்ன? புதன்கிழமையான இன்றைய தினம் அவர் பச்சை நிற கல் முகப்பு சங்கிலி அணிந்து வந்த காரணம் என்ன என்று பார்க்கலாம்.

செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மின்சார கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் மதுரைக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை எடுத்து கூறினார். நம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல செல்லூர் ராஜூவின் மனைவி அணிந்திருந்த நகைகளைப் பற்றியதுதான்.

செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்தி பொதுவாகவே அரசியல் ஆர்வம் கொண்டவர். மதுரையில் செல்லூர் ராஜூ பங்கேற்கும் விழாக்களில், நிகழ்ச்சிகளில் அவரும் பங்கேற்பார். இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பின் போதும் செல்லூர் ராஜூ அருகிலேயே அமர்ந்திருந்தார் ஜெயந்தி. பச்சை நிற புடவை அணிந்திருந்த ஜெயந்தி, அதற்கு மேட்ச் ஆக பச்சை நிற கற்கள் பதித்த சிறிய நெக்லெஸ் அணிந்திருந்தார்.

பெரிய அளவில் பச்சை மரகதக்கல் பதித்த முகப்பு சங்கிலியும் அணிந்திருந்தார் ஜெயந்தி. பச்சை மரகதக் கல்  நவரத்தினங்களில் அபூர்வமானது. நவகிரகங்களில் புதன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட இந்த கல்லை புதன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணியலாம்.

மரகதக்கல் நல்ல அறிவாற்றலை தரும். படித்து நல்ல உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் மரகதக்கல்லை அணியலாம். பச்சை நிறம் குபேரனுக்கு உகந்த நிறம். வீட்டில் செல்வம் தங்குவதற்கு மரகதக்கல்லை அணிவது சிறப்பு. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மீனாட்சி சிலை மரகதப்பச்சை கற்களால் செய்யப்பட்டது. அதனாலேயே அக்கோவிலில் அதிக அதிர்வலையும், சக்தியும் பெற்றிருக்கிறது.

மதுரையில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் பச்சை நிறம் கொண்ட புடவைகளை அதிகம் அணிவார்கள் அதே போல பச்சை நிற அணிகலன்களையும் விரும்பி அணிவார்கள். வியாபாரம் செய்யும் அனைவருமே இந்தக் கல்லை அணியலாம். மரகதக் கல் மோதிரத்தை அணிந்து கொண்டால் ஷேர் மார்க்கெட் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

புதன்கிழமையான இன்றைய தினம் பச்சை நிற புடவை அணிந்து வந்திருந்த செல்லூர் ராஜூ மனைவி ஜெயந்தி, மரகதக்கல் முகப்பு வைத்த சங்கிலியை அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow