கரூரில் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம் – தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.

கரூரில் அரசு பள்ளியில் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் அருகே புலியூர் காளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25- க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Read more : சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்...இனி 2 ஆயிரம் ரூபாய் பாஸில் ஏசி பஸ்ஸிலும் போகலாம்
இந்நிலையில், அந்த பள்ளியில் மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
இதுகுறித்து மாவட்டக்கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார். முன்னதாக மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What's Your Reaction?






