தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்...இனி 2 ஆயிரம் ரூபாய் பாஸில் ஏசி பஸ்ஸிலும் போகலாம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்...இனி 2 ஆயிரம் ரூபாய் பாஸில் ஏசி பஸ்ஸிலும் போகலாம்

சென்னையில் 2 ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ்ஸில் இனி ஏசி பேருந்துகளிலும் பயணிக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் நாளை தொடங்கி வைக்கிறார்.

ஏசி பஸ்கள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 50 ஏசி பேருந்துகளும் பயன்பாட்டில் உள்ளது.இந்த ஏசி பேருந்துகள் பெரும்பாலும் கிளாம்பாக்கம், திருப்போரூர், நாவலூர் போன்ற ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளை மையப்படுத்தி இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது 1000 ரூபாய்  கட்டணத்தில் மாதம் முழுவதும் ஏசி பேருந்துகள் நீங்கலாக மற்ற அனைத்து பேருந்துகளிலும் விருப்பம் போல் பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த நிலையில் ஏசி பேருந்துகளிலும் விருப்பம் போல் பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வர பயணிகளிடையே தொடர் கோரிக்கை இருந்து வருகிறது. 

ரூ.2000  கட்டணம்

இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தற்போது 75000 பயணிகள் ஒரு மாதத்திற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் விருப்பம் போல் பயணம் செய்யும் அட்டையின் மூலம் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 2000 ரூபாய் கட்டணத்தில் மாதம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கும் இந்த திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நாளை தொடங்கி வைக்கிறார்.

Read more :பஸ்ஸில் பெண்களிடம் சில்மிஷம்- இளைஞரை விரட்டி பிடித்து பொதுமக்கள்