தமிழ்நாடு

பேய்கள் பரிமாறிய உணவு திருவிழா...பிரம்மாண்ட அரங்கில் உணவை ருசித்த மக்கள்

உணவு திருவிழாவில் ஆடு, கோழி, முயல், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளும் நண்டு, கோழிக்கால் மற்றும் கோழி ஈரல், சிக்கன் பிரியாணி, இத்தாலிய உணவுகள் உட்பட 31 வகையான உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

பேய்கள் பரிமாறிய உணவு திருவிழா...பிரம்மாண்ட அரங்கில் உணவை ருசித்த மக்கள்

திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் பிரம்மாண்ட அரங்கில் பேய்கள் உணவு பரிமாறும் வித்தியாசமான உணவத் திருவிழா நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்று சைவ,அசைவ உணவுகளை ருசித்து உண்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் -  சேடப்பட்டி சாலையில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் கேட்டரிங்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் தங்களது திறமைகளை நிரூபிக்கும் விதமாக உணவுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

பேய் வேடமிட்டு வரவேற்பு

இந்த ஆண்டு ஜாக் கோ லான்டேன் என்ற தலைப்பில் பேய்கள் உணவு பரிமாறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் கேட்டரிங் துறையைச் சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் பேய் வீடு போன்ற வடிவமைப்பு ஏற்படுத்தி அரங்கினுள் செல்லும்போது அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் கல்லூரி கேட்டரிங் துறை மாணவிகள் பேய் போல் வேடமிட்டு வந்தவர்களை வரவேற்றனர்.

இந்த உணவு திருவிழாவில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர உணவு விடுதி நிர்வாக அலுவலர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பேய் விளையாட முடிந்த மாணவர்கள் ட்ரம்ஸ் செட் விருந்தினர்களை வரவேற்றனர். தொடர்ந்து அரங்கின் நுழைவு பகுதியில் மாணவிகள் சிறப்பு விருந்தினர்களுக்கு மண்டை ஓடு மாலைகளை அணிவித்தனர். தொடர்ந்து அரங்கிற்குள் சென்ற விருந்தினர்களுக்கு மாணவர்கள் சமைத்த உணவுகள் பற்றி செயல் விளக்கம் கொடுத்தனர்.

31 வகையான உணவுகள்

 இந்த உணவு திருவிழாவில் ஆடு, கோழி, முயல், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளும் நண்டு, கோழிக்கால் மற்றும் கோழி ஈரல், சிக்கன் பிரியாணி, இத்தாலிய உணவுகள் உட்பட 31 வகையான உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

பிறகு சிறப்பு விருந்தினர்களுக்கு பேய் வேடம் அணிந்த மாணவிகள் உணவுகளை பரிமாறினர். உணவருந்தும் சிறப்பு விருந்தினர்களுக்கு பேய் வேடம் அணிந்த மாணவ மாணவிகள் நடனமாடி மகிழ்ச்சி விருந்து அளித்தனர்.என்னைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பேய் வீட்டில் சமையல் செய்த உணவுகளை ருசித்து உண்டனர்.

 திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பேய்கள் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறிய வித்தியாசமான நிகழ்ச்சி பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

Read more:கோவிலுக்கு வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞரை கைது செய்த போலீஸ்