கோவிலுக்கு வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞரை கைது செய்த போலீஸ்
நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நன்னிலம் அருகே கோவில் கந்தன்குடி பகுதியில் கோவிலுக்கு பணிவிடை செய்ய வந்த 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கோவில் கந்தன்குடி கீழத்தெருவில் வசிக்கும் தம்பதியருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
கந்தன் குடியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12ம் வகுப்பு மாணவியின் தந்தை பணி செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்று அவரது மகளை கோவிலுக்கு பணிவிடை செய்ய அனுப்பியுள்ளார்.
Read more: குமரியில் பள்ளி தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம்பெண் – வீடியோ வெளியாகி பரபரப்பு
சிறுமி கோவில் சன்னதியில் உள்ள பொருட்களை எடுக்க சென்றபோது, கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நெடுஞ்சேரி தெற்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவரின் 32 வயதுடைய மகன் ராமநாதன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






