Sani Pradhosam 2024 : சர்வ சக்தி படைத்த சனி மகா பிரதோஷம்.. கடன் பிரச்சினை தீர இந்த 1 பரிகாரம் போதும் !

Sani Pradhosam 2024 : பிரதோஷத்தன்று மாலையில் சிவன் கோவிலில் நடக்கும் அபிஷேகத்திற்கு நம்மால் முடிந்த பால், தயிர், அரிசி மாவு, சந்தனம், பழங்கள், பூஜைக்கு தேவையான வில்வம், பூ, அருகம்புல் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். அன்றைய தினம் சிவனுக்குரிய ஓம் நம சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை சொல்வது சிறப்பானதாகும்.

Aug 31, 2024 - 05:45
Aug 31, 2024 - 18:34
 0
Sani Pradhosam 2024 : சர்வ சக்தி படைத்த சனி மகா பிரதோஷம்.. கடன் பிரச்சினை தீர இந்த 1 பரிகாரம் போதும் !
Sani Pradhosam 2024 Benefits in Tamil

Sani Pradhosam 2024 : சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் சிவ ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகமாகும் நோய்கள் நீங்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும். மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. தேய்பிறை சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஒடிப்போகும்

விரதங்களில் மிகவும் புண்ணிய பலன் தரும் விரதமாக கருதப்படுவது பிரதோஷ விரதமாகும். நம்முடைய தோஷங்கள், பாவங்கள் அனைத்தையும் போக்கி, சந்தோஷத்தை தரும் விரதமே பிரதோஷ விரதமாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷங்கள் வரும். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி திதியையே நாள் பிரதோஷ தினம் என்றும், திரயோதசி திதியன்று வரும் மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தையே பிரதோஷ காலம் என்றும் குறிப்பிடுகிறோம்.

சிவ பெருமானை, தேவர்கள் வழிபட்டு, வேண்டிய வரங்களை பெற்ற காலமாக பிரதோஷ காலம் குறிப்பிடப்படுகிறது. இந்த சமயத்தில் நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவ பெருமான் காட்சி தருவதாக ஐதீகம். அதனால் பிரதோஷத்தன்று நந்தியையும், சிவனையும் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். தொடர்ந்து எவர் ஒருவர் பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபடுகிறார்களோ அவர்களை எந்த துன்பமும் நெருங்காது. இறுதியில் அவர்களுக்கு முக்தி கிடைக்கும். சிவ கணங்களில் ஒருவராகும் பாக்கியமும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு ஒரே ஒரு வில்வ  இலை சாற்றி வழிபட்டால், பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது ஐதீகம். சிவ வழிபாட்டிற்கும், சிவனின் அருளை பெறுவதற்கும் உரிய மிகச் சிறப்பான நாள் பிரதோஷமாகும். 

பிரதோஷத்தன்று மாலையில் சிவனுக்கும், நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவாலயத்திற்கு வந்து சிவனை வழிபடுவதாக ஐதீகம். அதனால் பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் சிவனின் அருளுடன், தேவர்களின் அருள் ஆசிகளும் நமக்கு கிடைக்கும்.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. இன்று சனிப்பிரதோசம் இன்று அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

நமக்கு வரும் நோய்களும், துன்பங்களும் முன்ஜென்ம பாவத்தின் சம்பளமாக கிடைக்கிறது. அந்த பாவங்கள் தீர இப்பிறவியில் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும். ஆலய தரிசனம் செய்வதும், இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் நமது முன்ஜென்ம பாவங்களை போக்கும் இதன் மூலம் நோய்கள் நீங்கும். முன்ஜென்ம பாவங்கள் நீங்கவும், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவும் சனி மகா பிரதோஷ நாளில் சிவன், நந்திக்கு அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.  

பிரதோஷத்தன்று மாலையில் சிவன் கோவிலில் நடக்கும் அபிஷேகத்திற்கு நம்மால் முடிந்த பால், தயிர், அரிசி மாவு, சந்தனம், பழங்கள், பூஜைக்கு தேவையான வில்வம், பூ, அருகம்புல் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். அன்றைய தினம் சிவனுக்குரிய ஓம் நம சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை சொல்வது சிறப்பானதாகும். நந்திக்கும், சிவனுக்கும் நடைபெறும் அபிஷேகங்களையும், பூஜைகளையும் கண்டு தரிசித்த பிறகு, சந்திரனை தரித்த பிறகு பிரதோஷ விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும். இன்றைய தினம் ஆகஸ்ட் 31ம் தேதி வரும் சனிப் பிரதோஷத்தை பயன்படுத்தி, சிவ பெருமானை வழிபட்டு, அவரின் அருளை பெறலாம்.

சனிப் பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று வழிபடுவதுடன் வீட்டில் எளிமையான வழிபாட்டினை செய்வதால் வீட்டில் இருக்கும் பணப்பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பிரதோஷ வழிபாட்டினை நிறைவு செய்த பிறகு, வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து,ஒரு சிறிய கிண்ணத்தில் டைமண்ட் கற்கண்டுகளை வைத்து, அதன் மீது 5 கிராம்புகளை  வைக்க வேண்டும். பிறகு சிவ பெருமானிடம் மனதில் உள்ள கஷ்டங்கள், வேண்டுதல்கள் ஆகியவற்றை சொல்லி மனதார வழிபட வேண்டும். இந்த கற்கண்டு மற்றும் கிராம்பினை இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் இந்த 5 கிராம்புகளை எடுத்து வீட்டில் பணம், நகை வைக்கும் இடங்கள், பர்ஸ், அலுவலகத்தில் வேலை அல்லது தொழில் செய்யும் இடம் போன்றவற்றில் ஒவ்வொன்றாக வைத்துக் கொள்ளலாம். டைமண்ட் கற்கண்டுகளை பொடியாக்கியோ அல்லது அப்படியே வீட்டின் அருகில் உள்ள மரத்தடியில் இருக்கும் எறும்பு புற்றில் போட்டு விட வேண்டும் இதனால் வீட்டில் மகிழ்ச்சியான நிலை, பண வரவு ஆகியவை அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow