உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்... 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Sep 4, 2024 - 14:22
Sep 4, 2024 - 18:10
 0
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்... 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

: ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக்கொள்ள முடிவு செய்தது உக்ரைன். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்தது. அப்போது முதல் முடிவில்லாமல் தொடரும் இந்த போரினால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. அதேபோல், ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகரித்தபடி உள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களாக ரஷ்யா மீதான எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன். தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச அளவில் பொருளாதார ரீதியான பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.  

இந்த பதற்றமான சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனின் கிழக்கு கார்கிவ் மாகாணத்தின் பொல்டாவா பகுதியில் ரஷ்யா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உக்ரைன் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், சேதமடைந்த கட்டடங்களின் புகைப்படத்தையும் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும், கல்வி நிலையம், மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், இதற்காக இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை அந்நாடு பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். என்ன நடந்தது என்பதற்கான அனைத்து சூழ்நிலைகள் குறித்தும் முழுமையான, விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல், இந்த தாக்குதலுக்கான விளைவை ரஷ்யா நிச்சயமாக சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரஷ்ய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் நீண்டதூர தாக்குதல்கள் இப்போது தேவை, இனிமேலும் தாமதித்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இதனிடையே இந்தத் தாக்குதல் சம்பவம் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow