பாலியல் தொல்லை கொடுத்தாரா நிவின் பாலி..?

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நடிகர் நிவின்பாலி விளக்கம் அளித்துள்ளார்.

Sep 4, 2024 - 08:58
 0

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீதான வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நடிகர் நிவின்பாலி விளக்கம் அளித்துள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதரமற்றவை என நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என நிவின் பாலி கூறியுள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow