ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை..!
சென்னை அருகே பெருங்களத்தூர்- வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்களத்தூர்- வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இருவரும், விபத்தில் இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்று கோணத்தில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் மோதி இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்த ரெயில்வே போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தை சேர்ந்த விக்ரம் (25) மற்றும் ஆதிலட்சுமி (23) என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்த இருவரின் பைகளும் தண்டவாளத்தின் ஓரமாக கண்டு எடுக்கப்பட்டது. அதில் இளம்பெண்ணின் சான்றிதழ்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. அதேபோல் இளைஞரின் லேப்டாப், போன் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
எனவே தண்டவாளத்தை கடக்க முயலும்போது விபத்து ஏற்பட்டிருந்தால் பைகள் சேதமடைந்து இருக்கும் ஆனால் பைகள் ஓரமாக கிடந்ததால் இருவரும் தற்கொலை செய்துள்ளனரா? அல்லது விபத்தா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி இருவரின் தொலைபேசியையும் கைப்பற்றி ஏற்கனவே இருவரும் அறிமுகமான நபர்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சம்பவ இடத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?






