TN Rain: திடீரென வெளுத்து வாங்கிய கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பெய்து வரும் கனமழை
திருத்தணியில் திடீர் கனமழை முருக பக்தர்கள் கடும் அவதியடைந்த நிலையில், மலைக்கோயில் படிக்கட்டுகளில் உருண்டு ஓடும் மழை நீர் ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளில் கால்வாய் திறந்து இருப்பதால் பக்தர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவலாங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, போன்ற பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருத்தணி நகராட்சியில் ரயில் நிலையம் முன்பு கழிவு நீர் கால்வாய்கள் சரியான முறையில் தூர் வார வில்லை நெடுஞ்சாலைத்துறை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்வாய்கள் வீணானதால் மழை தண்ணீர் கழிவு நீர் ரயில் நிலையம் முன்பு சூழ்ந்து கொண்டது இதனால் ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர் நடவடிக்கை எடுக்க முன்வராத நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பயணிகள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக திருத்தணி மலைக்கோவில் சரவண பொய்கை திருக்குளம் அருகில் முருகன் கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் பகுதியில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளது மேலும் சரவணப் பொய்கை திருக்கோலம் சுற்றி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் கழிவு நீர் மழை நீர் செல்வதற்கு போதிய கால்வாய் வசதி இல்லை. இதனால் பச்சரிசி மலையில் இருந்து உருண்டு ஓடிவரும் மழை நீர் படிக்கட்டுகளில் ஆறாக ஓடுகிறது.
இந்தப் பகுதியில் திறந்திருக்கும் கால்வாய் இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாயை திறந்து வைத்துள்ளனர் மழைநீர் செல்வதற்கு, இதனை கடந்து செல்லக்கூடிய முருக பக்தர்கள் கோயிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் எந்த நேரத்திலும் விபத்து சந்திக்கக்கூடிய அபாயம் உள்ளது
இதுபோல் அபயகரமான உள்ள பகுதிகளில் உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முருக பக்தர்களுக்கு வேண்டிய இந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தை மாதத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?