சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து – வெளியான பகீர் தகவல்
"சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து விவகாரத்தில், அவரது வீட்டில் கொள்ளை நோக்கத்துடன் குற்றவாளி புகுந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் குறித்து பரபரப்பு தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர். தானேவில் கைது செய்யப்பட்ட விஜய் தாஸ், வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பே சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்து விஜய் தாஸ் வேலை பார்த்து வந்துள்ளார்.
தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றி வீட்டு வேலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் . தனது பெயரை பிஜோய் தாஸ், முகமது இலியாஸ் என மாற்றி ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்.சயிஃப் அலிகான் வீட்டில் திருட்டில் ஈடுபடும் நோக்கத்தில் நுழைந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் உண்மையான பெயர் முகமது ஷெரீபுஃல் இஸ்லாம் என தெரிய வந்துள்ளது
What's Your Reaction?