சென்னையில் அதிர்ச்சி.. மர்மமான முறையில் 7 வகுப்பு படிக்கும் சிறுமி உயிரிழப்பு... போலீசார் விசாரணை..!
கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு மாணவியின் சகோதரி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு உள்புறமாக தாழிட்டு இருந்துள்ளது.
பின்னர் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்தபோது தனது தங்கையான ஏழாம் வகுப்பு மாணவி கழுத்தில் புடவை சிக்கிக்கொண்டு இறுக்கிய நிலையில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேலைக்குச் சென்ற அவரது தாயாருக்கு தகவல் அளித்தார்.
பின்னர், தகவலின் பெயரில் ஐஸ்ஹவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி விளையாடும்போது கழுத்தில் தவறுதலாக புடவை சிக்கிக் கொண்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து "சந்தேக மரணம்" என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அவருடைய உறவினர்களிடம் ஐஸ்ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முழுமையான விசாரணை மற்றும் உடற்கூறாய்வுக்குப் பிறகே சிறுமியின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
வீட்டியில் தனியாக இருக்கும் சிறுமி உயிரிழந்ததுஅப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?