போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணன்... மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 22, 2025 - 12:15
 0
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணன்... மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!
பாம் சரவணன் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற பாம் சரவணன். பிரபல ரவுடியான இவர் மீது ஆறு கொலை வழக்குகள் இரண்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மூன்று கொலை வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவரைப் பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த நிலையில் அவர் சென்னை வியாசர்பாடி முன்னாடி நகர் பகுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு மீண்டும் ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் அவர் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து ரவுடி பாம் சரவணனை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு நாட்டு வெடிகுண்டை வீசி தப்பிக்க முயற்சித்துள்ளார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் பாம் சரவணன் காலில் சுட்டு கைது செய்தனர். இதை அடுத்து காயம் அடைந்த அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாம் சரவணனின் மனைவி மகாலக்‌ஷ்மி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 14ம் தேதி தனது கணவரை போலீசார் சுட்டுப்பிடித்ததாக கூறியுள்ளார். இதில் தனது கணவருக்கு இடது காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு அந்த குண்டு அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

குண்டு அகற்றப்பட்ட பின்னரும் ரத்தக்கசிவு உள்ளதாகவும் அதனை சரி செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கோரி கடந்த 18ம் தேதி சிறை நிர்வாகித்திடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் கூறியுள்ளார். 

எனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், பாம் சரவணனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார். 

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow