17 வயது சிறுமி கர்ப்பம்.. உறவினர்கள் போக்சோவில் கைது..!
17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: தாய், தந்தை, கணவர், மாமனார், மாமியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.
சென்னை அயனாவரம் பகுதியில், 17 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதால், அவருடைய உறவினர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் வயதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கர்பமாக உள்ள அந்த சிறுமி அயனாவரம் என்பதால் அயனாவரம் மகளிர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமிக்கு பெற்றோர் கடந்த ஆண்டே திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது. 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்து கொண்டதால் அயனாவரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமியை திருமணம் செய்து கொண்ட அயனாவரத்தைச் சேர்ந்த 28 வயது கணவர் சிறுமியின் தாய், தந்தை, மாமனார், மாமியார் மீது போலீசார் போக்சோ சட்டப்பிரிவு, குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குழந்தை திருமண தடைச்சட்டம் அமலில் உள்ள நிலையில், அந்த சிறுமிக்கு கடந்த ஆண்டே திருமணம் நடைபெற்றது எப்படி? அரசு அதிகாரிகள் இதனை கவனிக்காமல் இருந்தது எப்படி? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த உறவினர்கள், சிறுமியின் கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?