சேட்டன் உன்டல்லே..சேட்டை செய்ய வந்தல்லே..மனசிலாயோ.. ரஜினிகாந்த் வேட்டையன் முதல் சிங்கிள் எப்படி?

73 வயதிலும் தளராமல் ஆட்டம் போட்டுள்ளார் ரஜினிகாந்த். மனசிலாயோ படாலில் அவரது நடை, உடை, ஸ்டைலைப் பார்த்தால் வயதானாலும் இன்னும் ஸ்டைல் அப்படியே இருக்கு என்று ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

Sep 9, 2024 - 17:54
Sep 9, 2024 - 18:02
 0
சேட்டன் உன்டல்லே..சேட்டை செய்ய வந்தல்லே..மனசிலாயோ.. ரஜினிகாந்த் வேட்டையன் முதல் சிங்கிள் எப்படி?
Rajini Vettaiyan first single release

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் இன்று வெளியாகியுள்ளது.மலையாள வார்த்தைகளை பயன்படுத்தி லிரிக்ஸ் எழுதப்பட்டுள்ளது. "திருச்சு வந்தல்லே,தெறிக்கவிட்டான் வண்ணல்லே,திரட்டிவைகாண் வண்ணல்லோ திட்டம் உண்டல்லே சேட்டன் உன்டல்லே,சேட்டை செய்ய வந்தல்லே, பேட்டை துள்ளான் வந்தல்லே,வேட்டையன் அல்லே" என்ற வரிகளோடு தொடங்குகிறது பாடல். இசையை தெறிக்க விட்டுள்ளார் அனிருத் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலேசியா வாசுதேவன்,யுகேந்திரன் வாசு தேவன், அனிருத் ரவிச்சந்திரன், தீப்தி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில் நுட்பம் மூலம் ரீகிரியேட் செய்துள்ளனர். பொதுவாக என் மனசுத் தங்கம் என்ற சூப்பர்ஹிட் ஓபனிங் சாங்கை ரஜினிக்காக முரட்டுக்காளை படத்தில் பாடியவர் மலேசியா வாசுதேவன். 40 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் பேசப்படும் பாடலாக உள்ளது. இப்படி ரஜினிக்காக பல சூப்பர்ஹிட் ஓபனிங் பாடல்களைப் பாடியவர் மலேசியாவாசுதேவன் தான்.

அதிலும் தங்கச்சிக்காக அவர் பாடும் சென்டிமென்ட் பாடல்கள் எல்லாமே அருமையாக இருக்கும். தர்மயுத்தம் படத்தில் ஒரு தங்க ரதத்தில், சிவப்பு சூரியன் படத்தில் தங்கச்சி சிரித்தாலே பாடலை பாடியுள்ளார். கடைசியாக அருணாசலம் படத்தில் இடம் பெற்ற "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" பாடலை பாடியிருந்தார் மலேசியா வாசுதேவன். 27 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா வாசுதேவன் குரலில் வெளியாகியுள்ளது மனசிலாயோ பாடல். 

ரஜினி பொதுவாக படங்களில் ஸ்டைலாக இப்படிச்சூடு என்று தெலுங்கில் சொல்வார். அதையே மனசிலாயோ பாடலிலும் அனிருத் கொண்டு வந்து இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை வரவழைக்கிறது. செம குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் மஞ்சு வாரியார் செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மற்றும் வி.ஜே.ரக்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல், அமிதாப் பச்சனும், ரஜினிகாந்தும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரத்தில் படத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்தார். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது வேட்டையன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow