இபிஎஸ் vs ஓபிஎஸ்.. கிறிஸ்துமஸ் விழாவில் நீயா-நானா? ஒரே சிரிப்பு தான் போங்க!!!

சென்னை கீழ்பாக்கத்தில் கிறுஸ்துமஸ் விழாவில் இபிஎஸ் கலந்துக்கொண்ட அதே நாளில், தானும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடப்போகிறேன் என்று கூறி முதியோர் காப்பகத்தில் பரோட்டா சால்னா வழங்கி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி முடித்துள்ளார் ஓ.பி.எஸ். இருவரும் நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Dec 25, 2024 - 10:04
 0
இபிஎஸ் vs ஓபிஎஸ்.. கிறிஸ்துமஸ் விழாவில் நீயா-நானா? ஒரே சிரிப்பு தான் போங்க!!!

தொடர் தோல்வி, கட்சி ஒருங்கிணைப்பு, கட்டமைக்க முடியாத கூட்டணி என தவித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வாழ்வா, சாவா நிலை. இன்னொரு பக்கம் அதிமுகவில் இருந்து விலகி சென்று தனியாக ஒரு குழுவை ஆரம்பித்து, வலம் வந்துக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் நெறுங்க நெறுங்க எதையாவது பண்ணி தொடர்ந்து லைம்லைட்டில் இருக்கலாம் என நினைத்து அதிமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினர், களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ லைட் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் எடப்பாடி கலந்துகொண்டார். கேக் வெட்டிய பிறகு அவர் சிறப்புரை நிகழ்த்தினார். அபோது விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கும்போது, ஆடிட்டோரியத்தின் மேல்தளத்தில் இருந்து கமகமெவென மட்டன் பிரியாணி வாசம் வீச ரத்தத்தின் ரத்தங்கள் எடப்பாடியின் பேச்சை கேட்பதை விட்டுவிட்டு, பிரியாணியை ஒரு பிடிபிடிக்க ஓட்டம் பிடித்துள்ளனர். தான் பேசி கொண்டு இருந்த போது எதிரே இந்த சேர்கள் காலியாக எடப்பாடி உச்சக்கட்ட டென்ஷனுக்கு போனதாக கூறப்படுகிறது. 

எடப்பாடியின் கொண்டாட்டம் இப்படி முடிய மற்றொரு புறம், இபிஎஸ் என்ன செய்கிறாரோ அதை அப்படியே நாமும் செய்து லைம் லைட்டில் இருக்க வேண்டும் என ஓபிஎஸ் தனக்கு பக்கபலமாக இருக்கும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினரிடம் திட்டவட்டமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கிறுஸ்துமஸ் விழாவை சிறப்பிக்க இபிஎஸ் சென்றதை போல, அதே நாளில் அதே ஏரியாவில் ஒரு கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியுள்ளார் ஓபிஎஸ். அதாவது கடந்த டிசம்பர் 21ம் தேதி தன்னுடைய அரை டஜன் ஆதரவாளர்களை அழைத்துச் சென்று, கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் ஓ.பன்னீர்செல்வமும்  கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். அந்த விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் அதை கொடுத்துவிட்டு, பின்னர் அனைவருக்கும் உணவளிக்க சென்றார் ஓபிஎஸ்.

அப்போது வயதான முதியோருக்கு பரோட்டாவும் சால்னாவும் கொடுத்து ஒருவழியாக கிறிஸ்துமஸ் விழாவை முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் பரவ, பல் போன முதியவர்களுக்கு புரோட்டாவா, ஒரு நியாயம் வேணாமா பாஸ் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் இபிஎஸ் vs ஓபிஎஸ் போட்டியில் தலைசுற்றி கிடக்கும் அதிமுக தொண்டர்கள் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நடந்த காமெடிகளை வைத்து மேலும் கிறுகிறுத்துபோய்யுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow