ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் டிரைலர் வெளியீடு
Nilavuku En Mel Ennadi Kobam Trailer : இயக்குநர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Nilavuku En Mel Ennadi Kobam Trailer : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையுடன் உலா வருகிறார். நடிகர் தனுஷ் சமீப காலமாக நடிப்பதை தாண்டி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பா பாண்டி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் குவித்தது.
இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பாராட்டினார்கள். தொடர்ந்து, தனுஷின் 50-வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை தனுஷே இயக்கி நடத்திருந்தார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பலமுரளி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அதிலும் ‘கோல்டன் ஸ்பேரோ’ படல் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது. 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வரும் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று (பிப். 10) வெளியானது. காதல், கலாட்டா, சோகம் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
முன்னதாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இப்படம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவை பகிர்ந்திருந்தார். அதில், “நீண்ட நாட்களுக்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் வழக்கமான ஒரு காதல் கதையை கண்டு ரசித்தேன். தனுஷ் உருவாக்கியுள்ள உலகத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் கண்டு உற்சாகமடைந்தேன். இதைக் காணும் அனைவருக்குமே இந்த உற்சாகம் ஏற்படும். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியே காதலின் அப்பாவித்தனத்தில் நிகழ்வது தான்" என தெரிவித்துள்ளார்.
#NEEK trailer https://t.co/QiXPdHqFRe #DD3 ❤️❤️❤️ — Dhanush (@dhanushkraja) February 10, 2025
What's Your Reaction?






