Pa Ranjith: “தங்கலான் படத்துக்கு பட்ஜெட் சிக்கல் இருந்தது..” ஞானவேல் ராஜாவை கூல் செய்த பா ரஞ்சித்!

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம், வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பிரச்சினை குறித்து இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா ரஞ்சித் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Aug 6, 2024 - 22:17
 0
Pa Ranjith: “தங்கலான் படத்துக்கு பட்ஜெட் சிக்கல் இருந்தது..” ஞானவேல் ராஜாவை கூல் செய்த பா ரஞ்சித்!
Pa Ranjith

சென்னை: கோலிவுட்டில் இந்தாண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தங்கலானும் ஒன்று. பா ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார், ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்நிலையில், தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பா ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குறித்து வெளிப்படையாக பேசினார். அட்டக்கத்தி படத்தில் இருந்து இப்போது வரை எனது வளர்ச்சியில் ஞானவேல் ராஜா சாரின் பங்கு ரொம்ப முக்கியமானது. தங்கலான் படத்தை ஸ்டுடியோ க்ரீன் பேனரில் இயக்க முடிவானபோது, பலரும் வேண்டாம்ன்னு சொன்னாங்க.

ஞானவேல் ராஜாவை சுற்றி பல சர்ச்சைகள் இருப்பதால், அவருடன் வேலை செய்ய வேண்டாம் என சிலர் அட்வைஸ் செய்தனர். ஆனால், நான் அவருடன் நிற்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். அப்படி அவருடன் இணைய முடிவெடுத்ததால் தங்கலான் படத்தை நான் நினைத்தது மாதிரி எடுக்க ஞானவேல் ராஜா ரொம்பவே சப்போர்ட் செய்தார். ஆரம்பத்தில் கொஞ்சம் பட்ஜெட் பிரச்சினைகள் இருந்தாலும், அதையெல்லாம் சரிசெய்து தங்கலான் படத்தை முடிக்க உதவி செய்தார் என ஞானவேல் ராஜா குறித்து நெகிழ்ச்சியாக பேசினார். முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் பருத்திவீரன் சர்ச்சையில் அமீர் – ஞானவேல்ராஜா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது.

அப்போது இயக்குநர் பாரதிராஜா, கரு பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி, சேரன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் அமீருக்கு ஆதரவாக பேசியதோடு, ஞானவேல்ராஜாவுக்கும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல், தங்கலான் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனபோதும், ஞானவேல் ராஜா தான் அதற்கு காரணம் என சொல்லப்பட்டது. பட்ஜெட் பிரச்சினையால் தான் தங்கலான் படத்தை ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்யவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார் பா ரஞ்சித். இந்நிலையில், தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் தொடர்ந்து பேசிய பா ரஞ்சித், இந்தப் படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க - “நடிப்பு தான் எனக்கு வெறி” சீயான் விக்ரம்

மேலும், நான் பார்த்த உலக சினிமாக்கள் தான் எனது இயக்குர் ஆசையை இன்னும் அதிகப்படுத்தியது. சினிமா ஒரு பவர்ஃபுல் மீடியம் என்பதால், அதனை கையில் எடுக்கும் போது நமது பிரச்சினைகளையும் வரலாற்றையும் பேச முடியும். எனது மக்களின் வலிகளையும் பாகுபாடுகளையும் வரலாறு சமமாக பேசவில்லை. இந்த வரலாறு ஒருபக்கமாக இருந்தது, சினிமாவிலும் அதே நிலை தான் காணப்படுகிறது என பேசினார். அதேபோல், பாபா சாகேப் அம்பேத்கர் தான் தனக்கு ஆசிரியர் என்பதாகவும், எப்போதும் அம்பேத்கரின் குரலாக என்றைக்கும் இருப்பேன் எனவும் பா ரஞ்சித் பேசினார்.

தொடர்ந்து பேசிய பா ரஞ்சித், தனது குரு வெங்கட் பிரபுவுக்கும் நன்றி கூறியதோடு, அட்டக்கத்தி உருவானது பற்றியும் நெகிழ்ச்சியாக பேசினார். அதேபோல், மெட்ராஸ் படத்தின் வெற்றியை பார்த்து தான் ரஜினி எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், எனக்கு ரஜினி சாருடன் ஓர்க் பண்ண பயம் இருந்ததாகவும், ஆனாலும் கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினேன் எனக் கூறினார். அதேபோல் விக்ரமின் நடிப்பை பார்த்து நான் பலமுறை வியந்துள்ளேன். தங்கலான் படத்திற்காக நடித்தபோது விக்ரம்க்கு விலா எலும்பு முறிந்தது. அப்போதும் ஒரு சண்டைக் காட்சியில் அவரை கொடுமைப்படுத்தி நடிக்க வைத்தேன் என ஜாலியாக பேசினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow