Thangalaan: “எனக்கு அதுமட்டும் தான் வெறி... லூசா டா நீ..” தங்கலான் மேடையில் சீயான் விக்ரம் ஓபன்!

பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீயான் விக்ரம் பேசியது வைரலாகி வருகிறது.

Aug 6, 2024 - 20:18
 0
Thangalaan: “எனக்கு அதுமட்டும் தான் வெறி... லூசா டா நீ..” தங்கலான் மேடையில் சீயான் விக்ரம் ஓபன்!
Chiyaan Vikram

சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் தங்கலான். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கேஜிஎஃப் தங்க சுரங்கத்தை பின்னணியாக வைத்து தங்கலான் படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா படங்களை போல தங்கலானும் நில அரசியலை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய சீயான் விக்ரம், தனது சினிமா கேரியர் குறித்தும் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் பற்றியும் உருக்கமாக பேசினார். சேது, பிதாமகன், அந்நியன், ஐ, ராவணன் போன்ற படங்கள் எல்லாமே கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும், தங்கலான் படத்திற்காக அதைவிட அதிகம் உழைத்துள்ளேன். தங்கலான் எனக்குள்ளே இருப்பதாகவும், நடிக்கும் போது என்னால் அவனை உணர முடிந்ததாகவும் சீயான் விக்ரம் கூறினார். 

தங்கலான் படத்திற்காக காலில் அடிப்பட்ட மாதிரி நடித்தேன். ஆனால், எனது நிஜ வாழ்விலும் எனக்கு அப்படியான கஷ்டங்கள் இருந்தன. சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஆசையாக இருந்தது. வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது தான் எனக்கு எப்போதும் விருப்பமானது. ஆனால், காலேஜ் படிக்கும் போது ஒரு நாடகத்தில் நடித்து சிறந்த நடிகன் என்ற விருது வென்ற அதேநாளில் விபத்தில் சிக்கி கால் உடைந்து நின்றேன். காலையே வெட்டி எடுத்துவிட வேண்டும் என மருத்துவர்கள் சொன்னாங்க. இனி எழுந்து நடக்கவே முடியாதுன்னும் சொன்னாங்க. 3 வருடங்களாக 23 சர்ஜரி செய்துவிட்டு பெட் ரெஸ்ட்டில் இருந்தேன்.

மேலும் படிக்க - அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் தனுஷ்

ஆனால், நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், கண்டிப்பாக நடப்பேன் என எல்லோரிடமும் சொன்னேன். அதோடு குச்சியை வைத்து நடந்தபடி வேலைக்கும் போனேன். அதற்கு என் அம்மா என்னை லூசு பைய மாதிரி பண்ணாத, உன்னால முடியாது என திட்டினார்கள். ஆனாலும் நான் விடாமல் வேலைக்கும் சென்றேன், பின்னர் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தேன். 10 வருடங்கள் தொடர்ந்து போராடியும் பெரிதாக சக்சஸ் இல்லை, இதனால் நண்பர்கள் உட்பட பலரும் என்னை பரிதாபமாக பார்ப்பார்கள். அப்போது நான் சினிமாவில் இருந்து விலகியிருந்தால், இப்போது உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது.

ஒருவேளை இப்போது இவ்வளவு பெரிய ஹீரோவாக இல்லையென்றாலும், தொடர்ந்து நடிக்க முயற்சி செய்துகொண்டே இருப்பேன் என விக்ரம் கூறினார். இது எல்லாவற்றுக்கும் ரசிகர்களாகிய நீங்கள் தான் காரணம் என ராவணன் படத்தின் வசனத்தை பேசிய சீயான், இயக்குநர் பா ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல் பா ரஞ்சித்துக்கு மேடையிலேயே வைத்து அட்வைஸ் செய்தார் விக்ரம். அதாவது “உங்களது வாய்ஸ்க்கு ரொம்ப வேல்யூ உள்ளது, அதனால் அதனை சரியாகவும் ரெஸ்பான்ஸிபலாகவும் பயன்படுத்துங்கள்” என சீயான் விக்ரம் கூற, அதற்கு ரஞ்சித்தும் ஆமாம் என்பதாக தலையை ஆட்டினார். சீயான் விக்ரமின் இந்த உருக்கமான பேச்சு அவரது ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow