பிறந்தது 2025 - கோவையில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்...!
உலகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவு அடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்து உள்ளது.
ஆங்கில புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் 2025" ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக தனியார் வணிக வளாகங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஆடல், பாடலுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மீடியா டவர் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது.
கோவையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த இளைஞர்கள் அங்கு உற்சாகமாக பாடி, ஆடி, நடனம் ஆடினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகம் முன்பு தமிழர்களின் பாரம்பரிய கலையான பெண்களின் பறை இசை முழுங்க ஆட்டம், பாட்டத்துடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
இங்கு உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுவின் முன்னாள் மண்டியிட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சாலையில் இருந்த குழந்தைகளிடம் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். குறிப்பாக கோவை மாநகரப் பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?