தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி.. மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்...!

ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிர்ச்சி.. மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்...!
மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்...!

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 21 வயதான இளம்பெண் ஒருவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் இளம்பெண் கல்லூரிக்கு ஆட்டோ மூலமாக சென்று வந்த நிலையில், கடந்த மாதம் ஆறாம் தேதி இளம்பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தவறான குறுஞ்செய்தி வந்திருப்பதை அவரது தந்தை கண்டுள்ளார். மேலும் தொடர்ச்சியாக மகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரது தந்தை இது குறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். சம்பவம் நடந்தது கல்லூரி மாணவி படிக்கும் கல்லூரி என்பதால் உடனடியாக சிந்தாரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மாற்றப்பட்டது. அப்போது மாணவிக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றதால் பாதிக்கப்பட்ட பெண் தேர்வுக்கு பிறகு வருவதாக தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அதிக மாற்றங்கள் ஏற்பட்டதால் அவரது தந்தை மகளிடம் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு அவர் தகவலை தெரிவித்த நிலையில், இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

இளம் பெண்ணின் தந்தை டிரைவராக இருந்து வரும் நிலையில் அவரது மனைவி கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.  இளம்பெண் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். 

கல்லூரியில் தோழி ஒருவர் மூலமாக இளம் பெண்ணுக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும் இளம் பெண்ணிற்கு ஸ்னாப் சாட் மூலமாகவும் பல நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு போனில் பேசி வந்துள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக போனில் இளம்பெண் இவர்களிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. மனவளர்ச்சி குன்றிய இளம் பெண் என்பதால் அதனை இவர்கள் சாதகமாக பயன்படுத்தி கல்லூரிக்கு இளம் பெண்ணை செல்லவிடாமல் சென்னையில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் இளம்பெண்ணை வால் டாக்ஸ் மற்றும் பெரிய மேடு ஆகிய பகுதிகளில் உள்ள பல விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பலமுறை விடுதிகளுக்கு சென்று இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.  சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் இது குறித்து தீவிரமாக அது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாதுகாவலரின் அனுமதியின்றி அழைத்து செல்லுதல், அனுமதியின்றி தொடுதல், பெண்ணின் கன்னியத்தை அவமதிக்கும் செயல், குற்றத்திற்கு உடந்தையாக செயல்படுதல், உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.