கோலிவுட்டில் புது டீலிங்? கோடி ரூபாய் ஹீரோக்களுக்கு ஆப்பு! Profit Share-க்கு மாறும் ஹீரோஸ்...
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களால், தயாரிப்பாளர்கள் தான் தெருக்கோடியில் நிற்க வேண்டிய சூழல் பல நேரங்களில் உருவாகிறது. இதற்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் விதமாக கோலிவுட்டில், Profit Sharing என்ற புதிய டீலிங் அறிமுகமாகியுள்ளது. இதனால் யாருக்கு ஆப்பு... யாருக்கு லாபம்..? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

கோடிகளில் பிஸினஸ் நடக்கும் பிரம்மாண்டமான தொழிலாக மாறிவிட்டது சினிமா. ஹீரோ முதல் டெக்னீஷியன்கள் வரை, கோடிகளில் தான் சம்பளம் வாங்குகின்றனர். முக்கியமாக ஹீரோக்களின் சம்பளம் பற்றி கேட்கவே வேண்டாம். 100 கோடி, 150 கோடி, 200 கோடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. மாஸ் ஹீரோக்கள் மட்டுமில்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹீரோவாக அறிமுகமானவர்கள் கூட கோடிகளில் சம்பளம் கொடுத்தால் தான், கால்ஷீட்டே கொடுக்கின்றனர். இதுதவிர, ஸ்டார் ஹோட்டலில் ரூம், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக கேரவன் உட்பட ஏகப்பட்ட கவனிப்புகள் செய்து கொடுக்க வேண்டும்.
அதேபோல், சில ஹீரோக்கள், படம் ரிலீஸாகும் போது ப்ரோமோஷனில் பங்கேற்கவும் தனியாக சில பல கோடிகளை கறந்துவிடுவதாக சொல்லப்படுகிறது. இப்படி கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தும், பெரும்பாலான படங்கள், போட்ட முதலுக்கு கூட வழியில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் திணறுவதை பார்க்க முடிகிறது. ஓடிடி தளங்கள் அறிமுகமான புதிதில், தியேட்டர் வசூலை விடவும் ஓடிடி ரைட்ஸ் விற்பனை தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்தது. ஆனால், தற்போது நிலைமை சரி இல்லாததால், படம் வெளியாகி அதன் ரிசல்ட்டை பொறுத்தே, ஓடிடி நிறுவனங்கள் டீலிங் பேசுகின்றன.
இதனால், இறுதியாக பாதிக்கப்படுவது என்னவோ தயாரிப்பாளர்கள் தான். சில நேரங்களில் ஷூட்டிங் கேன்சல், கால்ஷீட் பிரச்சினை காரணமாகவும் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு முடிவுகட்ட ஹீரோக்கள் அவர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனைப் பார்த்து சில இளம் ஹீரோக்கள் புதிய ரூட்டில், அக்ரிமெண்ட் போடத் தொடங்கியுள்ளனர். சம்பளத்தை கொஞ்சமாக குறைத்துவிட்டு, படத்தின் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் டீலிங் பேச, தயாரிப்பாளர்களும் க்ரீன் சிக்னல் கொடுத்து வருகின்றனர்.
முன்பெல்லாம் எதாவது ஒரு மெயின் ஏரியாவின் விநியோகத்தை வாங்கி, அதில் ஹீரோக்கள் கல்லா கட்டி வந்தனர். இப்போது தியேட்டர் ரைட்ஸ் மொத்தமாக ஒரே நிறுவனத்துக்கு கொடுக்கப்படுவதால், இதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், Profit Sharing என்ற டீலிங்கில் கால்ஷீட் கொடுத்து வருகிறார்களாம். விஜய், சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட பல மாஸ் ஹீரோக்கள், தற்போது Profit Sharing-க்கு மாறிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஹீரோவுக்கு லாபமா அல்லது தயாரிப்பாளருக்கு லாபமா எனத் தெரியவில்லை. ஆனால், ரசிகர்களோ பார்க்கிங், பாப்கார்ன் விலையை மட்டும் குறைத்தால் உங்களுக்கு புண்ணியமாக போகும் என மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
What's Your Reaction?






