ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி. 

Mar 16, 2025 - 09:22
Mar 16, 2025 - 09:42
 0
ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஏ.ஆர் ரகுமான்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் இதுவரை ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது ஒவ்வொரு பாடலிலும் பல்வேறு புதுமைகளை வெளிப்படுத்தும் இவர் தனது திறமை மூலம் படிப்படியாக உச்சத்திற்கு சென்றார்.

ரசிகர்களால் ‘இசைப்புயல்’ என்று அழைப்படும் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் மட்டுமல்லாமல்  இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆங்கில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் இவர் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மிகவும் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடைசியாக ‘அயலான்’, ‘ராயன்’, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியை பிரியப்போவதாக அண்மையில் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் பலரும் பல்வேறு வதந்திகளை பரப்பி வந்தனர். இதற்கு ஏ.ஆர்.ரகுமானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் பதிலடி கொடுத்தனர். இப்படி பல்வேறு தடைகளை தாண்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன் இசைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். 

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஏ.ஆர்.ரகுமான் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்  இருந்து வரும் இவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read more:-

நாட்டின் அடையாளத்தை மாற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow