சினிமா

GOAT: விஜய்யின் கோட் பட கதை இதுதானா... வெங்கட் பிரபுவின் ஸ்கெட்ச் ஒர்க்அவுட் ஆகுமா..?

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

GOAT: விஜய்யின் கோட் பட கதை இதுதானா... வெங்கட் பிரபுவின் ஸ்கெட்ச் ஒர்க்அவுட் ஆகுமா..?
GOAT one line story

சென்னை: லியோவை தொடர்ந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற கோட், செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா, மகன் விஜய் ஜோடியாக மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் விஜய்யின் இரண்டு கேரக்டர்கள் பற்றியும் இதுவரை எதுவும் தகவல் வெளியாகவில்லை. அதேபோல், பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியரது கேரக்டர் குறித்தும் தெரியவில்லை. இந்நிலையில், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி குறித்து தகவல்கள் லீக்காகியுள்ளன. இதுவரை வெளியான செய்திகளின் படி, கோட் பக்கா ஃபேமிலி சென்டிமெண்ட் மூவி என்றே சொல்லப்படுகிறது. ஆனால், அதனை ஆக்ஷன் ப்ளஸ் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெங்கட் பிரபு இயக்கியுள்ளாராம். இப்படி பலவிதமான அப்டேட்கள் வெளியானாலும், படக்குழு இதுவரை எதையும் உறுதிசெய்யவே இல்லை.

இந்நிலையில், கோட் ஒன்லைன் ஸ்டோரி குறித்தும், இப்படத்தின் ரன்னிங் டைம் பற்றியும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கோட் ஆக்ஷன் ப்ளஸ் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதாகவும், ரன்னிங் டைம் 2.30 மணி நேரம் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு இத்திரைப்படம் 2004ம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற மெட்ரோ குண்டு வெடிப்பு சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த படமாக இருந்தாலும் சென்சாருக்கு செல்லும் போது, அதன கதை சுருக்கம் பற்றி குறிப்பு கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க - வயநாடு நிலச்சரிவு... பிரபாஸ் 2 கோடி நிவாரணம்

அப்படி கோட் படத்தை சென்சாருக்கு அனுப்பிய போது, அதில் கதை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து யாரோ சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய, இப்போது அது வைரலாகி வருகிறது. 2004ம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், 41 பேர் உயிரிழந்தனர், 250க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் பின்னணியில் கோட் உருவாகியுள்ளதால், படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கோட் படத்தின் ஆடியோ லான்ச், ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளதாம். அதன்படி, ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆகஸ்ட் 25ம் தேதி கோட் ட்ரெய்லர் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கோட் படத்தின் ப்ரோமோஷனில், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது என தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.