'ஓராண்டில் 116 கோயில்களில் குடமுழுக்கு'.. அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்

கடந்த 3 ஆண்டுகளில் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2,098 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Sep 10, 2024 - 12:07
Sep 10, 2024 - 18:45
 0
'ஓராண்டில் 116 கோயில்களில் குடமுழுக்கு'.. அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
Minister Sekar Babu

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''நீதிமன்ற உத்தரவுகளால் பல நூறு ஆண்டுகளாக கோயில்களில் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்த தடை இருந்த நிலையில் அதற்கு தீர்வு கண்டு தற்போது திராவிட மாடல் ஆட்சியில் பல கோவில்களில் குடமுழுக்கு திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இறையன்பர்களுக்கு நல்ல அரசாக திராவிட மாடல் அரசு அமைந்துள்ளதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அந்த வகையில் பாம்பன் சுவாமி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள 36 ஆண்டுகளுக்கு பிறகு 18 ஆண்டுகள் நீதிமன்ற வழக்கினை முறையாக தீர்வு கண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.  3.11 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த கோயிலில் எங்கு அமர்ந்தாலும் ஒரு வைப்ரேசன் கிடைக்கும். 

இறுதியாக 1958ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. பிறகு கடந்த ஜூலை 12ம் தேதி இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயதாரர்கள் நிதி முறையாக கோவில்களுக்கு பயன்படுத்துவதால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 1,012 கோடி ரூபாய் உபயதாரர்கள் மூலம் கோயில்களுக்கு நிதி கிடைத்துள்ளது. 

இந்த கோவிலில் திங்கள் புதன் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் 500 பேருக்கும், செவ்வாய் வியாழன் பௌர்ணமி சஷ்டி கிருத்திகை ஆகிய தினங்களில் 800 பேருக்கும், சித்ரா பௌர்ணமி குருபூஜை உள்ளிட்ட விழா காலங்களில் 1000 பேருக்கும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம். திமுக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2,098 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டிருந்த நிலையில் வரும் 15ம் தேதி 86 கோவில்களிலும், 16ம் தேதி 25 கோவில்களிலும் குடமுழக்கு நடைபெற உள்ளது.

வருகின்ற ஒரு வாரத்திற்குள் 116 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 6,073 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 6853.14 ஏக்கர் நிலங்கள் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளன.  கடந்த 3 ஆண்டுகளில் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவில்களில் சேதமடைந்து இருக்கின்ற தேர்களை 11.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 53 திருத்தேர்கள் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

28.44 கோடி ரூபாய் செலவில் 172 தேருக்களுக்கு கொட்டகை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  கடந்த 3 ஆண்டுகளில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய தங்கத் தேர்கள் உருவாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அதில் ஒரு திருத்தேர் பெரியபாளையத்தம்மன் அருள்மிகு பவானி அம்மன் திருத்தேர் பக்தர்களுடைய நேட்டிக் கடனுக்காக வருகின்ற 14ம் தேதி ஒப்படைக்கப்படுகிறது.

27.16 கோடி ரூபாய் செலவில் 9 புதிய வெள்ளி தேர்கள் உருவாக்க திட்டம் வகுக்கப்பட்ட நிலையில், திருத்தணி முருகன் கோவில் வெள்ளி தேர் முழுவதுமாக பணிகள் முடிக்கப் பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இறை நம்பிக்கை உடையோருக்கு மகிழ்ச்சி தரும் அரசாக திராவிட மாடல் ஆட்சி பீடு நடைபோடுகிறது'' என்று அமைச்சர் சேகர்பாபு தெறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow